தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 april 2012

டெல்லியில் ஜெயலலிதா ! கோபத்தில் சிறிலங்கா !! மேலும் இரண்டு கட்சிகள் சிறிலங்கா செல்லும் இந்தியக்கு​ழுவில் இருந்து விலகின !


இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெற்று வரும் இந்திய மாநில முதலமைச்சர்களின் உள்நாட்டு பாதுகாப்பு மாநாட்டில், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பங்கெடுத்து வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவுக்கு செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து மேலும் இரண்டு கட்சிகள் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 
திரினமூல் கொங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளே தங்களது உறுப்பினர்களை குழுவில் இருந்து இறுதி நேரத்தில் விலக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக சுருங்கியுள்ளது.
இந்தக் குழுவிலிருந்து ஏற்கனவே அதிமுக, திமுக ஆகிய தமிழகத்தின் பிரதான கட்சிகள் வெளியேறியிருந்தன.
இந்நிலையில் இந்தியாவின் வட மாநில கட்சிகளான திரினமூல் கொங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் விலகியதன் பின்னணியில் தமிழக முதலமைச்சரின் டெல்லிப் பயணம் அமைந்திருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இடம்பெற்று வரும் இந்திய மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கெடுத்துள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், மாநில முதல்வர்கள் பலருடன் தனித்தனிச் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்திய மைய ஊடகங்களில் முக்கிய இடத்தினைவும் இவ்விடயம் வெளிவந்து கொண்டுள்ளன.
இந்நிலையில் சிறிலங்கா செல்லவிருந்த இந்திய நாடாளுமன்றக்குழுவில் இருந்து மேற்குறிப்பிட்ட இரு கட்சிகளும் விலகியுள்ளமை சிறிலங்காவுக்கு கோபத்தினை கிளறியுள்ளது.
இலங்கை விவகாரத்தைக்களமாகப் பயன்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆட்டம் போடுவதாக சிறிலங்காவின் சிங்களப் பேரினவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

Geen opmerkingen:

Een reactie posten