தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 april 2012

பிரித்தானிய தமிழர் பேரவையில் இருந்து சுகந்தகுமார் நீக்கம் !


ஆமாம் உங்களுக்கு பிடிக்காவிட்டால் துரோகி,மக்கள் வெறுக்கிறார்கள் என்று கூறி நீங்களும் நாறி தமிழரையும் நாறடிப்பீர்கள்!!சனல்4 போன்றவை நீதிக்காக போராடினால் அதை உரிமை கோரவும் உங்கள் குடும்ப வருமானத்தை தமிழர் பெயரால் வளர்க்கவும் மட்டுமே செய்யும் நீங்கள் உங்கள் கட்சிகளை கலைத்தாலே தமிழரின் உண்மை நிலை உலகம் அறியும்,அதுவரை உங்கள் போட்டிகளும் பேட்டிகளும் இப்படியான கழுத்தறுப்புக்களும் தமிழினம் முழுவதையும் உங்களைப் போன்றே உலகுக்கு காட்டும்.பிரித்தானிய தமிழர் பேரவையில் இருந்து நாதன்குமார் என்று அழைக்கப்படும் சுகந்தகுமாரை நீக்கியுள்ளதாக அதன் நிறைவேற்றுக்குழு இன்று தெரிவித்துள்ளது. கடந்தகாலங்களில் பல குழப்பங்களுக்கு காரணமான இவர், மாவீரர் தின நிகழ்வுகள் 2 டாகப் பிழவுபட்டு நடக்க மிகவும் ஆதராவாக இருந்தவர் என்பது யாவரும் அறிந்தவிடையம். அரசியல் முதிர்ச்சி இல்லாத கோமாளித்தனமான பேச்சுக்களை இவர் தொடர்ந்து பேசிவருகிறார் என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் இவரை தமது அமைப்பில் இருந்து நீக்கியுள்ளதாகவும். இனி சுகந்தகுமார் BTF தொடர்பாக எவ்விதக் கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது எனவும் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

BTF இன் ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது:

பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் திரு. நாதன்குமார்(நா.சுகந்தகுமார்) மற்றும் திரு.ந.சண்முகநாதன் ஆகியோருக்கும்; எந்தவித சம்பந்தமும் இல்லை. திரு.நாதன்குமார்(நா.சுகந்தகுமார்) மற்றும் திரு.ந.சண்முகநாதன் ஆகியோரின் பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்பான எந்த நடவடிக்கைக்கும் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் இன்று முதல் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை சகல அங்கந்தவர்களுக்கும், மற்றும் சகல அமைப்புகளுக்கும், பொது மக்களுக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை அறியத்தருகின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கடிதத்தலைப்பை துஸ்பிரயோகம் செய்தமையாலும் பிரித்தானிய தமிழர் பேரவையைத் தவறான முறையில் பிரதிநிதித்துவப் படுத்தியதாலும், மேலும் பொது நிகழ்வுகளில் திரு.நாதன்குமார் அவர்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பிரித்தானிய தமிழர் பேரவைக்குப் பங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளதாலும் மேற்படி முடிவை எடுப்பதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.


நிறைவேற்றுக்குழு, பிராந்திய ஒருங்கிணைப்பாளர்.
பிரித்தானிய தமிழர் பேரவை

Geen opmerkingen:

Een reactie posten