தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 april 2012

13 வது திருத்தம் நடைமுறைப் படுத்தாததினால் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தது!- இந்து நாளிதழ்


13 வது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அசமந்தமாக செயற்பட்டமையே இந்தியா, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தமைக்கு பிரதான காரணம் என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்து நாளிதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள எழுத்தாளர் ஒருவரான நிரூபமா சுப்பிரமணியம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டில் இலங்கை, ஜெனீவாவில் வெற்றிகொண்ட யோசனையிலும் இது குறித்த சரத்தொன்று உள்ளடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு யுத்தத்தின் போது, இலங்கை மனிதவுரிமைகளை மீறியதாக அங்கு வெளியிடப்பட்ட பிரேரணை தோல்வி கண்டது.
அதற்கு பதிலாக மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு பாராட்டு தெரிவித்தே பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.
யுத்தம் நிறைவடைந்த போதும், இலங்கையில் தேசிய பிரச்சினைக்கு யுத்த ரீதியான தீர்வுக்கு இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொள்ளவில்லை.
எனினும், 13 வது அரசியலமைப்பு ஊடாக அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என அந்த பிரேரணையில் ஒரு சரத்து உள்ளடக்கப்பட்டிருந்தமையையும் இந்திய எழுத்தாளர் நிரூபமா சுப்பிரமணியம் நினைவுகூர்ந்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten