தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 april 2012

இனங்களைப் பிரிக்க உலக நாடுகள் முயற்சி: ஜனாதிபதி குற்றச்சாட்டு

இனங்களைப் பிரித்து நாட்டைப் பிளவுபடுத்திப் பகைமையை வளர்ப்பதற்குச் சில உலக நாடுகள் முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.
இனங்களைப் பிரித்து நாட்டைப் பிளவுபடுத்திப் பகைமையை வளர்ப்பதற்குச் சில உலக நாடுகள் முயற்சிக்கின்றன. ஆயினும் அவற்றை வெற்றிகரமாக முறியடித்துச் சகல இன மக்களும் ஐக்கியமாக வாழும் இலங்கையை எம்மால் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
நுவரெலியா அல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையைப் பொறுத்தவரை மிக நீண்டகாலங்களாக சிங்கள தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். மலை நாட்டை ஆட்சி செய்த மன்னர்களும் முஸ்லிம் மக்களுக்கு விசேட வரப்பிரசாதங்களை வழங்கியுள்ளனர். அவர்களை மலை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் குடியமர்த்தியுள்ளனர். இதனை நாம் வரலாற்றில் பார்க்க முடிகிறது.
வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புகளின்போது முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களின் பக்கம் நின்று ஆதரவு நல்கியுள்ளனர். இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தபோதும் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதிலும் பங்களிப்பு செய்தனர்.
அதேபோன்று பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்க மேற்கொண்ட நடவடிக்கைகளிலும் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு எமக்கு மிகுந்த பலமாக அமைந்தது.
வரலாற்றுக் காலத்திலிருந்து முஸ்லிம் மக்கள் இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளமை இந்த நாட்டின் மீது அவர்கள் முழுமையான அன்பைச் செலுத்தியதால் தான் உலகில் சிலர் இத்தகைய மக்களை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஒன்றாக வாழ அவர்களுக்கு விருப்பமில்லை.
சில நாடுகள் இனங்களைப் பிரித்து நாடுகளைப் பிரித்து பகைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதனை நன்கு இனங்கண்டு உணர்ந்து நாம் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் எம்மால் வாழமுடிகின்றது.
பௌத்த சமயத்தில் புத்த பகவான் மிருகங்களுக்கிடையில் பேதங்கள் வேறுபாடுகள் நிலவினாலும் மனிதர்களுக்கிடையில் பேதங்கள் இருக்கக் கூடாது என்பதைப் போதித்துள்ளார். இதன் மூலம் எங்கே பிறந்தாலும் மனிதர்கள் மனிதர்கள் தான் என்பதையே அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் காரணத்தாலேயே எமது நாட்டிலும் சகல இன மத மக்களும் ஐக்கியமாக ஒன்றிணைந்து வாழ வழிசமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten