சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் தமிழ் சமூகத்தை தீவிரவாதத்தை நோக்கி தள்ளுகிறார்கள் என்றும் சஜின் வாஸ் குணவர்தன குற்றம் சாட்டினார். இவ்வாணைக்குழுவின் சிபாரிகள் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் ஒருபோதும் கூறவில்லை என்றும் சஜின் வாஸ் குணவர்தன கூறினார். ஜெனீவா தீர்மானமானது நிறைவேற்றுவதற்கான கடப்பாடு இல்லாத தீர்மானம் என்ற போதிலும் அது இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க விரும்பும் சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினரின் தந்திரோபாயத்தில் ஒரு முன்னோக்கிய படியாக அமையலாம். நாம் அதை அறிவோம்� என அவர் கூறினார்.
ஜெனிவாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், தமிழ் அமைப்புக்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்தவர்களில் சஜின் வாஸ் குணவர்தனா முக்கியமானவராவார். மகிந்த ராசபக்சவுக்கு மிகவும் நெருக்கமாக கருதப்படும் இவர் சிங்கள சண்டியன் போல ஜெனிவாவில் அநாகரீகமாக நடந்து கொண்டார் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவரே அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அரசதரப்பு குழுவின் முக்கிய நபராவார்.
Geen opmerkingen:
Een reactie posten