தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 april 2012

பொறுப்புக்கூறுதலும் பரிந்துரைகளை நிறைவேற்றுவதும் நிரந்தர சமாதானத்துக்கான அடிப்படை விடயங்கள்! ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர்


ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை அரசு நல்ல பாதையில் முன்னேறுவதற்காக அளிக்கப்படும் ஊக்கம் என ஐ.நா மனித உரிமைச் சபையின் அமெரிக்காவின் பிரதிநிதி Eileen Chamberlain Donahoe அவர்கள் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் Eileen Chamberlain Donahoe அவர்கள் ஊடகங்களை சந்தித்திருந்தார்.
எமது நம்பிக்கை, இப்பொழுது நிறைவேற்றப்பட்ட பிரேரணை, இலங்கையில் நிரந்த சமாதானத்தை உருவாக்கும் என்பதாகும். இந்த பிரேரணையின் நோக்கம் இலங்கை அரசுக்கு அது தன் சகல மக்களுடனும் ஏற்படுத்தும் நல்லிணக்க முயற்சியில் உதவுவதாகும். பொறுப்புக் கூறுதலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவேற்றுவதும் நிரந்தர சாமாதானத்தை நோக்கி முன்னேறத் தேவையான இரண்டு அடிப்படை அம்சங்கள்.
இலங்கைக்காக மட்டுமல்லாது, சர்வதேச மனித உரிமை கொள்கைகளுக்குமாக, பாரிய அளவில் மனித அழிவுகள் ஏற்பட்டும், உரிமைகள் மீறப்பட்டுமிருக்கும் போது நம்பிக்கையான விசாரணை ஒன்றும், ஒரு வகையாகன பொறுப்பு கூறலும் இருக்க வேண்டும். அது இல்லாமல், நல்லிணக்கமும், நிரந்தர சமாதானமும் இனங்களுக்கிடையில் வர முடியாது. இது இலங்கையின் சகல இன மக்களுக்கும் நல்லதொன்றும், அவர்களை நிரந்தர ஒற்றுமைக்கு இட்டு செல்லும் என்றும் நம்புகிறோம்.
இந்தியா வாக்களித்திருப்பது, அந்தப்பகுதி அயல் நாடுகளுக்கிடையில் கடுப்பு நிலைகளை தோற்றுவிக்காதா என்று கேட்டபோது, பிரேரணையானது எல்லா நாடுகளும், இலங்கை மக்களுக்கு ஒரு நிரந்தர சமாதானத்திற்காக, சிறிலங்கா அரசுடன் சேர்ந்து உழைப்பதற்காகும் என்றும் அதை எதிர்வழத்தில் பார்க்க முடியாதென்றும் கூறினார்.
அதே நேரம் இலங்கையின் நண்பனான இந்தியாவின் இணைவு, பிரேரணையின் நன்நோகத்தை தெளிவாக நம்பவைக்கிறதென்றும், பிரேரணையின் நடைமுறைக்கு இது பாரிய பங்களிப்பாக இருக்கும் என்றும்Eileen Chamberlain Donahoe கூறினார்.
மேலும் இலங்கை நம்பிக்கையான விசாரணை ஒன்றை நடத்தும் என்றும், அவர்களின் நல்லிணக்க அறிக்கையில் கூறப்பட்ட விடையங்களை நடைமுறைப்படுத்துவார்கள் என்று தானும் நம்புவதாகவும் கூறினார்.
இந்த இரண்டும் இலங்கையில் நடந்தது போன்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கும், மனித அழிவுகளுக்கும் பின்னர் ஒரு நல்லிணக்கம் ஏற்பட்டு, நிலையான சமாதானம் உண்டாக தேவையானவை என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten