இதன் முதல் கட்டமாகவே, இந்த ஆளில்லா விமான ரோந்துசேவை ஆரம்பமாகியுள்ளது. இலங்கைக் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் நுளைந்தால் அது அத்துமீறல். ஆனால் ஆளில்லா விமானங்கள் இலங்கை வான்பரப்பினும் இலகுவாக வந்துவிட்டுச் செல்லமுடியும் அல்லவா ? புலிகளின் விமானங்கள் வருவதையே கண்டறியமுடியாமல் திணறிய இலங்கை வான்படையினர், அதி நவீன ஆளில்லா விமானங்கள் வந்துசெல்வதையா கண்டறிந்து விடுவார்கள் ? இலங்கைக் கடற்படையினர் பாவிக்கும் தகவல் தொடர்புகளை இடைமறித்து கேட்கும் வசதிகள் இந்த விமானத்தில் பிரத்தியேகமாகப் பொருத்தப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற சில செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் கூட இதுபோன்ற விமானங்களை இந்தியா பாவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால், இலங்கை கதிகலங்கிப்போயுள்ளது. அடுத்த வாரத்திலாவது இலங்கை அமைச்சர்களில் ஒருவர் சீனா சென்று இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த ஆளில்லா விமானத்தை கண்டறியும் சில உபகரணங்களைப் பெற்றுவர முயற்சி எடுப்பார்கள் ! இல்லையேல் இது காதும் காதும் வைத்தது போல நடந்தேறலாம் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
(இராமநாதபுரம் உச்சிப்புளியில் அமைந்துள்ள தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)
Geen opmerkingen:
Een reactie posten