மக்கள் போராட்ட அமைப்பின் உறுப்பினர் குமார் குணரட்னத்தை ஏன் அரசாங்கம் கைது செய்யவில்லை என அந்த அமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினர் புபுது ஜாகொட கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களையும், ஏனைய சட்டங்களையும் மீறிச் செயற்பட்டிருந்தால் அவரை கைது செய்திருந்திருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியாக பிரயோகிக்கப்பட்ட கடுமையான அழுத்தங்களே குமார் குணரட்னம் விடுதலை செய்யப்படுவதற்கான காரணமாகும்.
எந்தவொரு நாட்டு பிரஜையும் குறித்த நாட்டுக்கு செல்ல வேண்டுமென பொலிஸாரிடம் கோரினால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமா?
சில நாட்கள் காணாமல் போயிருந்த நபர் ஒருவரிடம் முழுமையான விசாரணைகளை நடத்தாது நாடு கடத்துவது நியாயமாகுமா?
பாதுகாப்பு காரணங்களினால் குமார் குணரட்னம் வேறும் பெயர்களைப் பயன்படுத்தினார்.
நாட்டில் தற்போது பயங்கரவாதிகளோ கிளர்ச்சிக்குழுக்களோ கிடையாது, அந்த நிலையில் யார் கடத்தல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதனை அரசாங்கமே வெளிப்படுத்த வேண்டும் என புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten