தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 april 2012

17 பேர் கொலை: இலங்கை அரசை விடாது தொடரும் சாபம் !


2006ம் ஆண்டு 17 தொண்டு நிறுவன ஊழியர்கள் மூதூரில் கொல்லப்பட்டதை யாவரும் அறிவர். விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே அப்போது கடும் சண்டை நிலவியது. அவ்வேளையில் மூதூர் நகரப்பகுதிக்கு முன்னேறினர். அவ்விடத்தில் உள்ள மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்த நிலையில், அங்குள்ள அலுவலகம் ஒன்றில் பட்டினிக்கு எதிரான தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும் தங்கியிருந்தனர். இவ்வமைப்பு பிரான்ஸ் நாட்டால் நெறிப்படுத்தப்படுகிறது. இந் நிலையில் அங்கே வந்த இராணுவத்தினர் அந்தப் 17 பேரையும் வெளியே அழைத்து துப்பாகியால் சரமாரியாகச் சுட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்து புலிகள் ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில் இக் கொலைகளுக்கும் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்பதனை பிரான்ஸ் அரசு நன்கு அறியும்.

இப் படுகொலைகளை சர்வதேசம் விசாரிக்கவேண்டும் என பிரான்ஸ் அரசு கோரிக்கை விடுத்தது. முதலில் இணங்குவதுபோல நாடகமாடிய இலங்கை அரசு பின்னர், அதனை மறுத்துவிட்டது. இருப்பினும் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, கொல்லப்பட்ட 17 தொண்டு நிறுவனப் பணியாளர்களது உடலில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாகள் இலங்கை இராணுவம் பாவிக்கும் தோட்டாக்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அன்று முதல் இன்றுவரை இலங்கை அரசாங்கம் இப் படுகொலைகள் தொடர்பான எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

தற்போது இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகம், இப் படுகொலைகள் தொடர்பாக ராஜதந்திர மட்டத்தில் அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. நேற்றைய தினம் இது தொடர்பாக பிரான்ஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இக்கொலைகள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என அது கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான அழுத்தத்தையும் அது கொடுக்க தயாராகிவருவதாக மேலும் அறியப்படுகிறது. ஜெனீவாவில் மூக்குடைபட்டுள்ள இலங்கை அரசானது, மேலும் தன்னை சிக்கலில் போடவிரும்பாத நிலையில் என்ன செய்வது என்று தெரியாது தவித்துவருவதாக அறியப்படுகிறது.


Geen opmerkingen:

Een reactie posten