தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 april 2012

13வது அரசியலமைப்பு சீர்திருத்த அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும்! ரணிலிடம் சோனியா வலியுறுத்து!


இந்தியாவிற்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்க பெறுமானால் அது இலங்கையரின் விருப்பத்திற்கு அமையவே நிகழ வேண்டும் என  எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலைப்பாட்டை ஏனைய கட்சிகளும் கொண்டிருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியை ரணில் விக்கிரமசிங்க சந்தித்த போது சோனியா காந்தியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இருந்ததாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten