[ உதயன் ]
ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் மே மாதமளவில் முழுமையடைந்துவிடும். அதன் பின்னர் தேர்தல் நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக டக்ளஸ் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கான ஆளும் கட்சி முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இருப்பதாக இதன்போது, டக்ளஸ் தெரிவித்திருக்கின்றார்.
அவர் பங்கேற்கும் அனைத்து கூட்டங்களிலும் முதலமைச்சர் பதவியை இலக்கு வைத்தே உரையாற்றி வருகின்றார்.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களைக் கவனித்து வந்த கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பார் என செய்திகள் வெளியாகின.
தற்போது, புலிகளின் ஊடகத் தொடர்பாளராகவிருந்த தயா மாஸ்டரும் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவும் முதலமைச்சர் பதவிக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளிலும் முனைப்பு காட்டி வருகின்றார்.
மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக வடக்கு மாகாண சபைக்காக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.வி.பி. கட்சி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தனித் தனி மாகாணங்களாக அறிவிக்கப்பட்டன.
அதன் பின்னர் இதுவரையில் வடக்கு மாகாணசபைக்கு தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten