தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 april 2012

யாழ். பெண்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு கல்வி நிலையங்கள், இன்ரநெற் கபேக்கள் பங்களிப்பு! சுகாதார பணிப்பாளர் !


யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களும் இன்ரநெற் கபேக்களுமே அதிகளவில் பாலியல் ரீதியான துஸ்பிரயோகத்திற்கு வழி வகுப்பதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 
தனியார் கல்வி நிலையங்கள். மாலையில் 6 மணிக்கு பின்னர் வகுப்புக்கள் நடாத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தனியார் வகுப்பு நிலையங்களில் மலசல கூடம், குடிநீர் மற்றும் போதிய இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தப்படவேண்டும்.
விடுமுறைக் காலங்களில் தனியார் வகுப்புகள் தொடர்ச்சியாக நடாத்தப்படுவதும் மாணவர்களுக்கு உளத்தாக்கங்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக பாடசாலைக் கல்வி முடிந்ததும் மாணவர்கள் செய்வதறியாமல் உள்ளனர். இவர்களை கல்வி திணைக்களம் வழிப்படுத்த வேண்டும்
யாழ்ப்பாணத்தில் 21 வயதிற்கும் குறைந்தவர்கள் மதுபாவனையில் ஈடுபடுகின்றனர்.
பொது இடங்களில் மதுபானங்களை குடிகாரர்கள் அருந்துகின்றனர். இவற்றை பொலிஸார் தடுக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சில இன்ரநெற் கபேக்களில் பாடசாலை நேரத்தில் பாடசாலைச் சீருடையில் சென்று மாணவர்கள் இணையப்பாவனையில் ஈடுபடுகின்றனர்.
இவைதவிர மூடிய பகுதியில் கணணி மொனிற்றரை நெற்கபேக்களில் பாவிப்பதை தடை செய்ய வேண்டும். இவைகளே அதிகளவான சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறு கண்டறியப்பட்ட காரணங்களை இனங்கண்டு அவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் துஸ்பிரயோகங்களை இல்லாதொழிக்கலாம் என்றார்.
இரண்டாம் இணைப்பு
ஆளணி வளம் இன்மையே துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த முடியாதுள்ளது! ஊர்காவற்றுறை உதவி அரச அதிபர் 
ஊர்காவற்றுறை பிரதேச செயலப்பிரிவில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய உத்தியோகஸ்தர்கள்  இல்லாமையே காரணமாகும் என ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் முன்பள்ள பருவ உத்தியோகஸ்தர் ஆகியோர் இன்னமும் நியமிக்கப்படவில்லை.
இவ்வாறு ஆளணி வளம் இன்மையால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டப்படுத்த முடியாதுள்ளது. குறிப்பாக மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியாதுள்ளது.
எனவே மிக விரைவாக இவ்வெற்றிடங்களை நிரப்புவதன் மூலமே இவற்றை தடுக்க நடடிவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்றார்.
இதேவேளை ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
பாலியல் துஸ்;பிரயோகங்களில் ஈடுபடும் அரச உயர் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்- நல்லூர் பிரதேச செயலர்
உயர் பதவிகளிலுள்ள அரச உத்தியோகளின் பாலியல் துஸ்;பிரயோகங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் இவ்வாறு நடந்து கொள்ளுகின்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில் நந்தனன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் பாலியல் ரீதியான துஸ்;பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் உயர்; அரச உத்தியோகத்தில் உள்ளவர்களும் கல்வியலாளர்களும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஸ்;பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் தவறுகளைச் செய்கின்றபோதும் இவர்கள் தண்டிப்படாமல் உள்ளனர். இவர்ளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும். இவளுக்கு எதிரான குற்றங்களை மூடி மறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
யாழ்பாணம் சர்வதேச ரீதியாக பிரபல்ஜமடைந்த ஒரு இடம். இங்கு இவ்வாறான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் ஏனையவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். இவ்வாறான குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்ப்படவேண்டும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten