தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 april 2012

பிரபாகரனின் வெற்றுடல் தமீழத்தைப் பெற்றுத்தருமா ? ஹக்கீம் !


உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிழீழத்தைப் பெற்றுத் தர முடியவில்லை. அவரின் வெற்றுடல் தமிழீழத்தை பெற்றுத் தர இருப்பதாக புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மருதமுனையில் தபால் நிலையத்திற்கான புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்களுக்கு நண்பர்கள் யார் ? எதிகள் யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையில் சுமத்துவதற்கு ஆள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஜெனீவாவில் அரபு நாடுகளின் ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்குப் பெற்றுக் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார் என்று தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் என் மீது மிகப் பெரிய விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்த போது, தமிழர்களுக்கு எதிராக ஜெனீவா விடயத்தில் செயற்பட்ட ரவூப் ஹக்கீம் கம்பன் விழாவில் உரையாற்றுவதா, அந்த விழாவினை தமிழர்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று புலம் பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்தார்கள். ரவூப் ஹக்கீமை மட்டும் அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கூடவே கம்பனுக்கும் இராமனுக்கும் ஏசினார்கள். கம்பராமாயணம் ஆபாசமானது, அசிங்கமானது என்றெல்லாம் தெவித்தார்கள். புலம் பெயர் தமிழர்களுக்கு தங்களது நண்பன் யார், எதிரி யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையில் சுமத்த வேண்டுமென்பதற்காக ஆள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் ஆள் தேடும் விடயத்தில் நான் மட்டுமல்ல, நண்பர் சுமந்திரனும் பலியாகியுள்ளார். தமிழர்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பதற்கு தகுதியுடையவராகக் கருதப்படும் சுமந்திரனின் கொடும்பாவி யாழ். பல்கலைக்கழகத்தில் எரிக்கப்பட்டது. ஜெனிவாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பங்குபற்றாது இருந்தமை சிறந்த இராஜதந்திரமாகவே நான் பார்க்கின்றேன். அவசரப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படுகின்ற தீர்மானத்தால் எதிர்பார்க்கப்படும் நோக்கத்தை அடைய முடியாது. இதனால் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்குய தீர்வுகளை துருவப்படுத்தப் போகின்றது என்றுதான் ஜெனீவாவில் கூறினோம். அதுதான் இன்று நடந்துள்ளது.

இரண்டு பக்கங்களிலும் தீவிரவாதப் போக்குடையவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள்தான் எல்லாவற்றையும் கண் முடித்தனமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிழீழத்தை பெற்றுத் தர டியவில்லை. அவரின் வெற்றுடல் அதனை பெற்றுத் தர இருப்பதாக புலம்பெயர் தமிழர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். மேற்கண்டவாறு ஹக்கீம் புலம்பெயர் தமிழர்களைத் திட்டித்தீர்த்தார்.

Geen opmerkingen:

Een reactie posten