தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 april 2012

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் வேகமாக அகற்றப்படும் படைமுகாம்கள்!


வன்னிப் பெருநிலப்பரப்பில், பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச்செல்லும் பிரதான வீதியில் அமைந்திருந்த பிரதான இராணுவ முகாம்கள் நேற்று முன்தினம் தொடக்கம் அகற்றப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.
முரசுமோட்டைக்கு அண்மையாக அமைந்திருந்த முகாம், தருமபுரம் சந்தியில் அமையப்பெற்றிருந்த முகாம், சுண்டிக்குளம் சந்திக்கு அருகாமையிலுருந்த முகாம், விஸ்வமடு ரெட்பானா நகர் முகாம், ஆகிய முகாம்களே அகற்றப்பட்டிருக்கின்றன.
படையினரின் இத்திடீர் மாற்றம் குறித்து அச்சம் தெரிவித்துள்ள மக்கள்,  இம்முகாம்களை அகற்றிவிட்டு, பாரிய முகாம் ஏதேனும் அமைக்கும் திட்டத்தை படையினர் கொண்டள்ளனரா என சந்தேகம் தெரிவிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க மற்றும், ஐ.நா பிரதிநிதிகள் விஜயம் காரணமாகவும், படைமுகாம்கள் வன்னியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாக மேற்குலகிற்கு இலங்கை அரசாங்கம் காட்டிக்கொள்வதற்காகவும் இந்நாடகம் நடாத்தப்படலாம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
அதேவேளை, எதிர்வரும் 16ம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள, இந்திய நாடாளுமன்றக் குழு வட பகுதியை நேரில் பார்வையிட்டு தமிழ் மக்களின் நிலை குறித்து ஆராயவுள்ளது.
இதன் காரணமாகவே படையினர் தமது முகாம்களை அகற்றி தமது பிரசன்னம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது எனக் காட்டும் முகமாகச் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten