தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 april 2012

கப்பலில் தமிழர்களைக் கனடாவுக்கு அனுப்பிய நபர் கைதாம் !


எம்.வி.சன்.சி கப்பலில் தமிழர்களை கனடாவுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தவர் என்று நம்பப்படுகின்றவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர் என்று சந்தேகிக்கப்படுபவருமான தயாகரன் மார்க்கண்டு என்பவர் பிரான்ஸில் வைத்து இவ்வாரம் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவர் கனேடிய அரசிடம் கையளிக்கப்பட இருக்கின்றார். 492 பேரை எம்.வி.சன்.சி கப்பலில் 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கனடாவுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தார் என்று இவருக்கு எதிராக கனேடிய நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இவரை கைது செய்கின்ற நடவடிக்கை தொடரில் கனேடிய பொலிஸார், சர்வதேச பொலிஸார், பிரான்ஸ் அதிகாரிகள் பங்கேற்று இருக்கின்றனர்.

பிந்திய செய்திகள் :

தற்போது கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில், தயாகரனுக்கும் விடுதலைப் புலிகலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனத் தெரிய வருகிறது. இவரைக் கைதுசெய்து தடுத்துவைத்துள்ள பிரான்ஸ் பொலிசார், இவரை விரைவில் கனடாவுக்கு நாடுகடத்தவுள்ளனர் என இன்ரர்போல் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். கனடாவில் வைத்தே இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கான வழக்கு தொடரப்படவுள்ளதாம். இது நிரூபனமாகும் பட்சத்தில் தயாகரனுக்கு ஆயுட்தண்டனையும், 1 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்படலாம் என கனேடிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten