கடந்த வாரம் கிரிபத்கொடவில் வைத்துக் கடத்தப்பட்ட குமார் குணரட்ணம் என்னும் நபர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டார். இலங்கைப் புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்ட இவர், எவ்வாறு இவ்வளவு சீக்கிரம் விடுவிக்கப்பட்டார் ?
கடத்தப்படுபவர்கள் காணமல் போவதும், அவர்கள் சடலமாக மீட்க்கப்படுவதும் தானே இலங்கையில் காலாதி -காலமாக நடக்கிறது. இவர் மட்டும் எவ்வாறு விதிவிலக்கானார் என்று கேட்கிறீர்களா ? நடந்து முடிந்தது ஒரு சுவாரஷியமான விடையம் தான். சரி வாருங்கள் நடந்தது என்ன என அறிந்துகொள்ளலாம்.
இலங்கையில் செயல்பட்டுவரும் ஜே.வி.பி கட்சியில் இருந்து சில அங்கத்தவர்கள் பிரிந்து முன்நிலை சோஷலிசக் கட்சி என்று ஒரு கட்சியை ஆரம்பித்தனர். இதில் முக்கிய உறுப்பினராக குமார் குணரட்னம் செயல்பட்டு வந்தார். இவரைக் கடத்தினால் இக் கட்சியினர் தானா அடங்கிவிடுவார்கள் என விமல் வீரவன்ச கோத்தபாயவிடம் தெரிவிக்க , கோத்தபாய முன்னப் பின்ன யோசிக்காமல் சரி கடத்துங்கள் என்று தனது கூலிப்படைக்கு தெரிவித்துவிட்டாராம்.
புலனாய்வுப் பிரிவினரும் குமாரை சிம்பிளாகக் கடத்திவிட்டனர். ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் பூதாகரமானது. இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட குமார், இலங்கை வரும்போது தனது இலங்கை கடவுச்சீட்டை(பாஸ்போட்டைப்) பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவர் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை கொண்டவர் என்பதும், அவுஸ்திரேலியா இதில் தலையிடும் என்பதும் கோத்தபாயவுக்கு அறிவிக்கப்படவில்லையாம்.
குமார் கடத்தப்பட்டதும், விரைந்து செயல்பட்ட அவரது மனைவி மற்றும் மகள், அவுஸ்திரேலியா மற்றும் ஆசிய மனித உரிமைச் சபைக்கும் பகிரங்க முறைப்பாடுகளை மேற்கொண்டனர். இதனால் இலங்கை அரசு மீது கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. அவுஸ்திரேலியத் தூதுவர் கோத்தபாயவோடு நேரடியாகத் தொடர்புகொண்டு, குமாரை விடுவிக்குமாறு கோரியது பெரும் சங்கடத்தை தோற்றுவித்தது. கோத்தபாய கடும் கோபம்கொண்டு, அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்ற நபர் ஒருவர்
இலங்கையில் அரசியல் செய்யமுடியாது என காட்டுத்தனமாகக் கத்தினார். இதனை அவுஸ்திரேலியா திருப்பிக்கேட்டால் என்ன செய்ய முடியும் ? அதாவது இலங்கைப் பிரஜாவுரிமை மற்றும் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை கொண்ட இலங்கைத் தூதுவர் எவ்வாறு அவுஸ்திரேலியாவில் அரசியல் செய்கிறார் என்று அவர்கள் திருப்பிக்கேட்டால் கோத்தபாய என்ன செய்திருக்க முடியும் ?
கடந்த வாரம் கடத்தப்பட்ட குமார் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டார். இங்கேதான் கோத்தபாய தான் புத்திசாலி எனக் காட்ட முற்பட்டுள்ளார். அதாவது இவரை விடுதலை செய்துவிட்டு, பொலிஸ் நிலையம் சென்று சரணடையுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து நேற்றைய தினம் இரவு சுமார் 7.30 மணியளவில் அவர் பொலிஸ் நிலையத்தில் சென்று தான் விடுவிக்கப்பட்டதை தெரிவித்துள்ளார். இதனை வைத்து இலங்கை அரசு அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் என்ற சொல்பதத்தைப் பாவித்துள்ளனர்.
குமார் ஒன்றும் தேடப்படும் குற்றவாளி இல்லை பொலிஸ் நிலையம் சென்று சரணடைய. அவர் காணமல் போயிருந்தார். எனவே அவர் கண்டுபிடிக்கப்பட்டார் என்று தான் இலங்கை அரசு தெரிவித்திருக்கவேண்டும்.
இது எல்லாம் போக, இவரைத் தெரியாத்தனமாகக் கடத்தி பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்ட கோத்தபாய தனது ஆத்திரத்தை காட்ட தவறவில்லை. குமாரை உடனே நாடுகடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் நிலையம் சென்ற குமாரை அங்கிருந்தே வீமனநிலையம் கொண்டுசென்ற அதிகாரிகள், அவரை அவுஸ்ரேலியா செல்லும் யுஎல்.882 என்னும் விமானத்தில் ஏற்றி நாடு கடத்தியுள்ளனர். அவர் தனது பொருட்களைக்கூட எடுத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று மனிதன் இணையம் அறிகிறது.
கடத்தப்பட்ட குமார் விரைவாக விடுதலையானதற்கு மேலும் ஒரு காரணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க இவ்விடையம் தொடர்பாக கடும் முயற்சிகளை மேற்கொண்டாராம் !
அவுஸ்திரேலிய அரசுடன் இப்போதுதான் தாம் நல்லுறவுகளைக் கட்டியெழுப்பி வருவதாகவும், இதற்கிடையில் இவ்வாறு ஒரு பிரச்சனை வந்தால் தனது முயற்சிகள் அனைத்தும் பாழாகிவிடும் என்றும் அவர் மாரடித்துப் புலம்பியுள்ளார். இவர் பிரத்தியேகமாக கோத்தபாயவை தொடர்புகொண்டு குமாரை உடனே விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய அரசோடு முண்டுவது பெரும் பாதிப்புகளை இலங்கைக்கு ஏற்படுத்தும் எனவும் இவர், கோத்தபாயவுக்கு பாடம் எடுத்துள்ளாராம் ! என்ன செய்ய முடியும் கடைசியில் பணிந்தார் கோத்தபாய ! எதுக்கெடுத்தாலும் ஆட்கடத்தலில் ஈடுபடும் கோத்தபாயவுக்கு இது ஒரு நல்ல பாடம் !
|
Geen opmerkingen:
Een reactie posten