தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 april 2012

மட்டக்களப்பில் மகாத்மா காந்தி, பேடன் பவல் ஆகியோரின் சிலைகள் விசமிகளால் உடைத்தழிப்பு!


மட்டக்களப்பு நகரில் மிகவும் பிரசித்தி பெற்றதும் சுமார் அறுவது வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதுமான அகிம்சைவாதி மகாத்மா காந்தியின் சிலை மற்றும் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் ஆகியோரின் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளன.
நேற்று வியாழக்கிழமை இரவுக்கு பின்னர் இந்த சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பின் கடந்த காலங்களில் அகிம்சை போராட்டங்களின் முக்கிய இடமாக திகழ்ந்து வந்ததுடன் மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டத்தை கௌரவிக்கும் வகையிலும் இந்த சிலை நிறுவப்பட்டிருந்தது.
அத்துடன் பேடன் பவலின் நூற்றாண்டு விழாவின் நிகழ்வுகள் தம்புள்ளையில் இடம்பெற்று வருகையில் அதுவும் உடைக்கப்பட்டுள்ளது.
இரு சிலைகளினதும் தலைப்பகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சம்பவத்தினை தொடர்ந்து பதற்ற நிலையை தணிப்பதற்காக குறித்த பகுதியில் பொலிஸ்மற்றும் படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நகர அமைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட்டோர் சம்பவம் தொடர்பில் பார்வையிட்டதுடன் சிலை உடைப்பு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.
சிலை சேதமாக்கப்பட்ட பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் லால் செனவிரட்ன குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் விசாரணையையும் மேற்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் துரித விசாரணையை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள ஆனைப்பந்தி விபுலானந்தா மகளிர் கல்லூரியில் உள்ள சுவாமி விபுலானந்தர் சிலையும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் சிலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மகாத்மா காந்தி மற்றும் பேடன்பவுல் ஆகியோரின் சிலைகள் உடைப்பு: சீ.யோகேஸ்வரன் பா.உ. கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 06 ஏப்ரல் 2012, 07:52.39 AM GMT ]
மட்டக்களப்பு நகரின் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வரும் காந்தியின் சிலையும், பெடர்ன்பவுல் அவர்களின் சிலையும் உடைக்கப்பட்டமை மாவட்டத்தின் வாழ் தமிழ் மக்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அக்கண்டனத்தில் மேலும் தெரிவிக்கையில்
இந்திய நாட்டிற்கு விடுதலையை அகிம்சை ரீதியான பெற்றுக் கொடுத்த ஒரு மகான் மகாத்மா காந்தி, அதே போன்று சேவை மனப்பாங்கை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமகான் பேடன்பவுல் இவர்களின் மகாத்மா காந்தி இந்திய நாட்டையும், பெடர்ன்பவுல் ஐரோப்பிய நாட்டையும் சேர்ந்தவர். இன்று ஜெனிபா தீர்மானத்தின் பின் இந்தியாவையும், ஐரோப்பிய நாடுகளையும் எதிரியாக நோக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கமும், அதன் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பின்னனியாகவுள்ள ஆயுதக்குழுக்கள் பலவித செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் இவ்விரு சிலையும் உடைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
பொதுவாக இவ்விரு சிலைகளும் மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தின் மிக அருகில் உள்ளது. இராணுவ ரோந்துகள் அடிக்கடி இப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அத்தோடு அருகாமையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
 இச்செயற்பாடானது திட்டமிட்ட ஒரு செயற்பாடாக நடைபெற்றுள்ளது. சிலையை உடைப்பதையும், சிலை தாபிப்பதையும் சிலர் அரசியலாக பாவித்துவரும் ஒரு சில செயற்பாடு இம்மாவட்டத்தில் உருவாகியுள்ள நிலையில் இச்சம்பவம் நடைபெற்றது. மிகவும் வன்மையான கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இச்செயற்பாட்டை புரிந்தவர்களின் கண்டு பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமை அரசாங்கத்துக்கும், பொலிசாருக்கும் உண்டு என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என தனது கண்டன அறிக்கையில் சீ.யோகேஸ்வரன் எம்.பி. தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten