[ உதயன் ]
அறிக்கையைப் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுமென அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த அறிக்கை மார்ச் மாத முற்பகுதியில் வெளியிடப்படவிருந்தது. அதே காலத்தில் ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை அமெரிக்கா கொண்டு வந்திருந்தது.
எனவே, ஒரேநேரத்தில் இரண்டு பாரதூரமான விடயங்களைக் கையாள அமெரிக்கா விரும்பவில்லை. ஆகையால், ஜெனிவா மாநாடு முடிந்த நிலையில், இப்போது இந்த அறிக்கையை வெளியிடத் தீர்மானித்தோம் என்று அந்த இராஜதந்திரி தெரிவித்தார்.
போர்க் குற்றங்கள் தொடர்பில் இதேபோன்ற ஓர் அறிக்கையை 2009ஆம் ஆண்டு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்தது.
இப்போது வெளிவரவுள்ள அறிக்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் பல புதிய ஆவணங்களை அமெரிக்கா முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten