ரோறிக்கான (கொன்சவேடிவ்) நிதி அன்பளிப்பு வரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள நிறுவனம் மூன்று வருடங்கள் வரி கட்டவில்லை (Tories' third largest donor is company that paid no tax for three years) என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 180 பவுண்ஸ் (�136,180) பிரித்தானிய கொன்சவேடிவ் கட்சிக்கு வழங்கப்பட்டிருப்பதாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் நீதி கோரும் இன அழிப்பு, போர்க்குற்றம் போன்றவற்றை வலியுறுத்த தவறி நிற்கும் பிரித்தானிய ஆளும் கட்சிக்கு இவ்வாறு பணம் விரையம் செய்திருப்பதைவிட, அந்தப் பணத்தைக் கொண்டு தாயகத்தில் போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு உதவிகள் புரிந்திருக்கலாம் எனவும், புலம்பெயர் நாடுகளில் இன அழிப்பு, போர்க்குற்றத்தை வலியுறுத்தும் அமைப்புகளிற்கு நிதி வழங்கி உதவி இருக்கலாம் என்றும், பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் தரப்பில் ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
கார்டியன் பத்திகை வெளியிட்டுள்ள செய்தி:
கொன்சவேடிவ் கட்சிக்கு பாரிய நன்கொடை வழங்கியுள்ள நிறுவனம் ஒன்று கடந்த மூன்று வருடங்களாக வரி கட்டாது இருப்பதுடன், கடந்த வருட கணக்கை இதுவரை சமர்ப்பிக்காது இருப்பதனால், நிறுவனங்களை நிருவகிக்கும் கம்பனி கவுசினால் தடை செய்யப்படும் நிலையில் இருக்கின்றது. வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்களை விற்பனை செய்யும், வெளிநாட்டு நிறுவனமான �லைகா மொபைல்�, கொன்சவேடிவ் கட்சிக்கு ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 180 பவுண்ஸ் (�136,180) நிதியை இந்த காலாண்டில் வழங்கியுள்ளது. இது கொன்சவேடிவ் கட்சிக்கு இந்த காலாண்டில் வழங்கப்பட்ட மூன்றாவது பெரிய தொகையாகும்.
ஆனால் அண்மையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் �லைகா மொபைல்� 2008 முதல் 2010வரை எந்தவித விரியையும் செலுத்தவில்லை. ஆனால் 47 முதல் 88 மில்லியன் மொத்த வருமானத்தை இந்தக் காலப் பகுதியில் அது பெற்றிருக்கின்றது. கடந்த வருடத்திற்கான கணக்கை இதுவரை சமர்ப்பிக்காத காரணத்தினால், �லைகா மொபைல்� நிறுவனம்�� நிறுவனப் பதிவில்�� இருந்து நீக்கப்பட்டு, வர்த்தகம் மேற்கொள்ள தடை செய்யப்படுவதற்கான எச்சரிக்கையை ��கம்பனி கவுசிடம்�� இருந்து கடந்த மாதம் பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த மாதம் �லைகா மொபைல்� எடுத்த முயற்சியினாலும், நிறுவனத்தை வளர்க்கின்றோம் எனக் காரணம் கூறியதாலும் இந்தத் தடை ஏற்பாடு தடுக்கப்பட்டுள்ளது.
கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடை தொடர்பாக பரப்புரை மேற்கொண்டுவரும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மான் (John Mann) இது பற்றிக் கூறுகையில், கொன்சவேடிவ் கட்சிக்கு நிதி வழங்க முடியும் என்றால், ஏன் வரி செலுத்த முடியாது எனக் கேள்வி எழுப்பியதுடன், கொன்சவேடிக் கட்சியேனும் வரி அறவிடும் இன்லான்ட் றெவெனியூவிற்கு (Inland Revenue) பணத்தைக் கொடுக்கலாம் எனச் சுட்டிக்காட்டினார். லண்டனில் டொக்லன்ட் பகுதியில் அமைந்துள்ள �லைகா மொபைல்� நிறுவனத்தின் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா, ஆளும் அரசாங்கத்திலுள்ள அபிவிருத்தி அமைச்சர் அன்றூ மிச்சேல் (Andrew Mitchell), வர்த்தக அமைச்சர் வின்ஸ் கேபிள் (Vince Cable) ஆகியோருடன் எடுத்த நிழற்படங்கள் அவரது இணையத்தளத்தில் இடப்பட்டுள்ளன.
லண்டனின் தொழிற்கட்சி நகரபிதா வேட்பாளர் கென் லிவிங்ஸ்ரனுக்கு (Ken Livingstone) நிதி சேகரிப்பதற்காக கடந்த மாதம் மேபெயார் பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்வில் �லைகா மொபைல்� நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த அதேவேளை, அவருக்கு ஒரு இலட்சம் (�100,000) பவுண்ஸ் நன்கொடை வழங்குவதாகவும் அறிவித்திருந்தனர். ஆனால் இவ்வாறு எந்தவித நிதியும் அவருக்கு வழங்கப்படவில்லை. இந்த நிறுவனம் 2010ஆம் ஆண்டு 88 மில்லியனும், 2009ஆம் ஆண்டு 47 மில்லியனும், 2008ஆம் ஆண்டு 2.7 மில்லியன் பவுண்ஸ்சும் பிரித்தானியாவில் மொத்த வருமானமாகப் பெற்றிருக்கின்றது. ஆனாலும் இந்நிறுவனம் நட்டக்கணக்கை சமர்பித்த காரணத்தினால் வரி விலக்குப் பெற்றிருந்தது. 2008ஆம் ஆண்டு எட்டாயிரம் (�8,000) பவுண்ஸ்களை வரியாகச் செலுத்தி இருந்த போதிலும், இந்தத் தொகை அடுத்த ஆண்டில் மீளளிக்கப்பட்டிருந்தது.
அல்லிராஜாவின் கட்டுப்பாட்டில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்களை விற்பனை செய்யும் �லைகா ரெல்� என்ற இன்னொரு நிறுவனமும் இருப்பதுடன், 2008ஆம் ஆண்டு முதல் 2010வரை இந்த நிறுவனம் 260 மில்லியன் பவுண்ஸ்களை மொத்த வருமானமாகப் பெற்றிருக்கின்றது. ஆனால் இந்த நிறுவனமும் எந்தவித வரியையும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டாருடன் பேசுவதற்கு மலிவான வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்களைத் தேடி நாடும், வெளிநாட்டு வேலையாட்கள் மத்தியில் தொலைபேசி அழைப்பு விற்பனை பெரியளவில் இடம்பெறுகின்றது.
கடந்த ஜூலை மாதம் �லைகா மொபைல்� வெளியிட்ட - இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசிற்கான அழைப்புக்கள் ஒரு பெனி (1p) என்ற விளம்பரம் பிரித்தானிய விளம்பரக் கட்டுப்பாட்டாளர்களால் (The Advertising Standards Authority - ASA) தடை செய்யப்பட்டது. கொள்வனவாளர்களுக்கு பிழையான தகவலை வழங்குவதாகவும், 15 நிமிடங்களின் பின்னர் கட்டணம் அதிகரிப்பதாகவும் கூறியே இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் �லைகா மொபைல்� வெளியிட்ட வெளிநாடுகளுக்கு அரைப்பெனி (1/2p) என்ற விளம்பரமும் தடை செய்யப்பட்டது. (இதேபோன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் �லைகா மொபைலின்� மற்றொரு நிறுவனமான ஜி.ரி மொபைலின் (GT Mobile) விளம்பரமும் தடை செய்யப்பட்டது.)
இது பற்றிக் கருத்துக்கூறிய �லைகா மொபைல்� நிறுவனத்தின் பேச்சாளர், தாம் அனைத்து வரிகளையும் செலுத்தி விட்டதாகக் கூறினார். 2009-2010 வரை �லைகா மொபைல் யூ.கே லிமிட்டட்� தனது வர்த்தகத்தை விருத்தி செய்த காரணத்தினால், வரி செலுத்துமாறு தம்மிடம் கேட்கப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார். கடந்த வருடத்திற்கான கணக்கை ஏர்னஸ்ட் அன்ட் யங் (Ernst & Young) கணக்காளர்கள் அவதானமாகச் செய்வதால் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் கூறினார். கென் லிவிங்ஸ்ரனின் நிதி சேகரிப்பு நிகழ்விற்கு சென்று, நன்கொடை வழங்குவது பற்றி பேசியமை தொடர்பாகக் கருத்துரைத்த அவர், பல்லாயிரக் கணக்கானவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் யாராவது அரசியல் நிகழ்வுகளுக்கு, அல்லது பொது நிழ்விற்குச் செல்வது வழக்கம்தானே என பதில் வழங்கினார்.
இவ்வாறான நடவடிக்கைகள் தமிழர்கள் தொடர்பான எதிர்மாறான கருத்துக்களை வெளிநாட்டு அரசுகள், கட்சிகள், மக்கள் மத்தியில் மட்டுமன்றி தொலைபேசி நிறுவனங்கள் மத்தியிலும் ஏற்படுத்தி வருகின்றமை அனுமதிக்க முடியாத செயற்பாடு என பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
To read The Guardian paper click here
இங்கே எழுதப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் கார்டியன் பத்திரிகையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை: மற்றும் பிரித்தானிய தமிழ் மக்களின் சொந்தக் கருத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளது. இச் செய்தி பிரித்தானிய சட்டமான Freedom of Information Act 2000 உட்பட்டே எழுதப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten