தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 april 2012

பாலித கொஹன்னவை விசாரிக்க அவுஸ்திரெலிய பொலிசார் இணக்கம் ?


அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் அவுஸ்திரேலிய சமஷ்டி தமிழர் அமைப்பு, பாலித கொஹன்னவை போர்குற்றத்துக்காக விசாரிக்கவேண்டும் என சட்ட அமைச்சரைக் கோரியுள்ளது. இதனை அடுத்து சட்ட அமைச்சு இந்த விசாரணையை அவுஸ்திரேலியப் பொலிசாரிடம் முறைப்படி கையளித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. பாலித கொஹன்ன இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர். அவர் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரஜா உரிமைகொண்டவர் ஆவார். இதன் அடிப்படையில் அவரை அவுஸ்திரேலியப் பொலிசார் விசாரிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

அவுஸ்திரேலிய சமஷ்டி தமிழர் அமைப்பானது, பாலித கொஹன்ன மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கை, இன அழிப்புக்கு துணைபோதல் என்பன இவற்றுள் முக்கியமானவை ஆகும். அவுஸ்திரேலியப் பொலிசார் இதுகுறித்து தமது கருசனையை வெளியிட்டுள்ளனர். தமிழர் அமைப்பு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை தாம் மதிப்பீடுசெய்வதாகவும், அதனை ஆராய்ந்து தாம் விரைவில் ஒரு முடிவை எடுக்க இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாலித கொஹன்ன ஐ.நாவுக்கான இலங்கையின் நிலந்தர வதிவிடப் பிரதிநிதியாக உள்ளார். அத்தோடு அவர் தற்சமயம் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2204

Geen opmerkingen:

Een reactie posten