தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 april 2012

தீர்வை முன்வையுங்கள் என்பதே கோரிக்கையாகும்!


[ வீரகேசரி ]
மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதாக கூட்டமைப்பினர் கருதக்கூடும். வேறு வழியில்லை. இலங்கையின் இன விவகாரத்தில் சிங்களத் தரப்பு அடிக்கடி முருங்கை மரத்தில் ஏறிக் கொள்வது வழமையாகும்.
இந்த ஒரு பின்னணியில் ஒரு சரியான விடயத்திற்காகவும் நல்ல நோக்கத்திற்காகவும் நாமும் ஏதோ ஒரு மரத்தில் ஏறித்தாக் ஆகவேண்டும்.
அது வேறு ஒன்றல்ல.
தமிழ் மக்களின் தீர்வு விடயம் தொடர்பாகவே.
ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கான தீர்வை தமிழர் தரப்பும் ன்வைக்க வேண்டும் என தொடர்ச்சியாக இப்பத்தியில் கோரிக்கை விடுத்து வந்துள்ளோம்.
ஆனால் தமிழ் தலைமைத்துவங்கள் அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இருக்கட்டும் அல்லது அரசாங்கத்துடன் அரியாசனத்தில் இருக்கும் தமிழர் தரப்பாகட்டும் எல்லோரும் தீர்வு யோசனை என்று வரும்போது நழுவல் என்ற பாதையில் இலகுவாகப் பயணித்து விடுகின்றனர்.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம் என்ற வாதத்தை அனைத்து சிறுபான்மையின தலைøமத்துவங்களும் மேடைகள் தோறும் பேசி வருவதுடன், ஊடகங்களில் அறிக்கைகளாகவும் வெளியிடுகின்றன.
தமிழர்களாகட்டும், முஸ்லிம் மக்களாகட்டும் இவர்களது அரசியல் உரிமைப் பயணத்தில் அரசாங்கத்துடன் இøணந்திருப்பவர்களால் ஒரு அங்குலம் தானும் முன் நகர்ந்ததாக வரலாறு இல்லை.
இது அனைத்து தமிழ் பேசும் மக்களில் இருந்து அரசாங்கத்துடன இணைந்துள்ள தலைமைத்துவங்களின் அசைக்க முடியாத பண்பாக உள்ளது.
ஆனால் அரசாங்கத்துடன் இணைந்திருக்காது வெளியில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் மேற்கூறிய பண்பினைக் கொண்டிருக்கத் தேவையில்லை.
மக்களுக்கான பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டைத் தவிர வேறு எந்த கடமைப்பாடும் இவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
எனினும் தமிழ் மக்களின் சார்பில் எவ்வித அரசியல் தீர்வையும் முன்வைக்காது கூட்டமைப்பு போன்றவர்கள் தொடர்ந்தும் செயற்படுவதானது தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு மீதான நம்பிக்கையினை கேள்விக்குள்ளாக்குவதாகவே அமைந்துள்ளது.
தனி இராச்சியக் கோட்பாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகிறது. முதலில் அந்தக் கோட்பாடு இல்லாமல் செய்யப்பட வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி இராச்சியக் கோட்பாட்டில் தொடர்ந்தும் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வினை முன் வைக்காததன் எதிரொலியாகவே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறானதோர் கருத்தை கூட முன்வைத்ததற்குக் காரணமாகும்.
அமைச்சர் ஹக்கீம் உட்பட அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற அனைத்து முஸ்லிம் தலைமைத்துவங்களும் முஸ்லிம் மக்களுக்கான அரசியல் உரிமையைப் பெற்றுக் கொடுத்ததாக ஒன்றுமில்லை என்பது ஒரு புறமிருக்க, அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம்களுக்கான பாத்தியதைக் குறித்து அரச தரப்புடன் பேசுவதாகவும் தெயவில்லை.
இந்த ஒரு நிலையிலேயே அமைச்சர் ஹக்கீம் அவர்களின் கூற்று தமிழ் மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வினை முன்வைத்திருக்குமாக இருந்தால் பல விடயங்களை தெளிவுபடுத்தி இருக்கலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யத் தவறிய இந்த விடயத்தை தமிழர் சார்ந்த வேறு ஏதாவது ஒரு அமைப்பு செய்ய முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
இன விவகார தீர்வு என்பது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடனேயே சாத்தியமாகக் கூடியது என்பதையும் இப்பத்தியில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அல்லது சர்வதேச மத்தியஸ்தம் என்பது இலங்கைக்கு புதியதல்ல.
இனவிவகார தீர்வு குறித்து அரசாங்கத் தரப்பு ஏற்கனவே பல தடவைகள் நோர்வே மத்தியஸ்தத்துடன் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது.
ஒஸ்லோ, தாய்லாந்து, ஜெனீவா என பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை கடந்த காலங்களில் நாம் கண்டுள்ளோம்.
இந்நிலையில் மூன்றாம் தரப்பு தேவையில்லை. எமது வழிமுறையின் பிரகாரமே அரசியல் தீர்வுக்கான பயணம் அமையும் என அரசாங்கத் தரப்பு மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருப்பதை தமிழ் மக்கள் நம்பத் தயாராக இல்லை.
தான் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோரும் ஜெனீவா தீர்மானத்தையே எதிர்த்து நிற்கும் அரச தரப்பு இன விவகாரத்திற்கான தீர்வை இனிமேலும் தரும் என எதிர்பார்த்துக் காத்திருப்பதில் அர்த்தம் இருப்பதாக தமிழ் மக்கள் எண்ணவில்லை.
கடந்த அறுபது வருட காலமாக இன விவகாரத்திற்கான தீர்வினை பிரசவிக்க இயலாது இலங்கை உள்ளது.
ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள், இணக்கப்பாடுகள் என தொடர்ச்சியாக இடம்பெற்ற போதும் சுகப் பிரசவம் இன்னும் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட தீர்வு தொடர்பாக அரசாங்கத் தரப்புடன் ஒரு வருட காலமாக பேச்சுவார்த்தை நடத்தியும் இறுதியில் கண்ணா மூச்சி விளையாட்டாக முடிந்துவிட்டது.
அறுபது வருட காலத்திற்கு மேல் பிரசவிக்க முடியாது திணறிக் கொண்டிருக்கும் ““தீர்வுக் குழந்தை'' சர்வதேச மருத்துவிச்சிகளினால் சத்திர சிகிச்சை மூலமே சாத்தியமாகும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
அதற்கு தமிழ்த் தலைமைத்துவங்கள் தம்ஐமு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
தீர்வு குறித்த எண்ணப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்க முன்வர வேண்டும். முதலில் தமிழ்த் தரப்பு தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை தீர்வுப் பொதியாக முன்வைக்க @வண்டும்.
வி. தேவராஜ்
http://news.lankasri.com/show-RUmqyETcOUlo4.html

Geen opmerkingen:

Een reactie posten