“இந்தத் தகவலை பிரபாகரன் இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்” என்று தெரிவித்த இலங்கை அமைச்சர், அந்த பேட்டியில் பிரபாகரன் அமெரிக்கா பற்றி கூறியவற்றை, பொதுக்கூட்டம் ஒன்றில் படித்தும் காண்பித்தார்.
இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நேற்று (வியாழக்கிழமை) இலங்கை, பிலியந்தலவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
1986, மார்ச் 3-ம் தேதி வெளியான த வீக் இந்திய சஞ்சிகையில் பிரபாகரனின் பேட்டி வெளியாகியது என்று தெரிவித்த அமைச்சர், அதில் கூறியுள்ள திட்டத்தையே தற்போது அமெரிக்கா இலங்கையில் செயல்படுத்த முனைகிறது என்றும் தெரிவித்தார்.
பிரபாகரனின் பேட்டியில் உள்ள பகுதி என்று அமைச்சர் படித்துக் காட்டிய பகுதியில் பிரபாகரன், “இலங்கையில் இனப் பிரச்னை தீராமல் இழுத்து கொண்டு போக வைப்பதே அமெரிக்காவின் நோக்கம். இனப் பிரச்னை அதிகமானால்தான், இலங்கையின் திருகோணமலை பகுதியில் உள்ள துறைமுகத்தில் அமெரிக்காவால் கால் வைக்க முடியும். அங்கேயே தமது ராணுவ தளம் ஒன்றையும் அமெரிக்கா நிறுவிக்கொள்ள முடியும்” என்று கூறியிருந்தார்.
இலங்கை அமைச்சர் ரணவாக்க, அமெரிக்கா வேறு நாடுகளிலும் இதே திட்டத்தை செயல்படுத்துகிறது என்றும் தனது பேச்சில் குறிப்பிட்டார். “ஆஸ்திரேலியா, டார்வின் நகரில் சமீபத்தில் அமெரிக்க ராணுவம் தரையிறங்கியது. ஆசிய-பசுபிக் பகுதியில் அமெரிக்கா பலமாக கால் வைக்க விரும்புவதன் ஆரம்பமே அது. அப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் எண்ணிக்கை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்கும்” என்றார் அமைச்சர்.
அமைச்சர் குறிப்பிட்டுள்ள ராணுவ தரையிறக்கம், ஆஸ்திரேலியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான ஒரு பைலாட்ரல் ஒப்பந்தப்படி நடைபெற்றது. அந்தப் பகுதியில் அமெரிக்க ராணுவம் 2014-ம் ஆண்டு வரை தங்கியிருக்க வழி செய்யும் ஒப்பந்தம் அது.
ஒப்பந்தம் முடிந்தபின், ஆஸ்திரேலியா அதை நீடித்தால்தான் அமெரிக்க ராணுவம் அங்கு தமது தளத்தை வைத்திருக்க முடியும்.
Geen opmerkingen:
Een reactie posten