தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 april 2012

கடத்தப்பட்ட பிறேம்குமார் கண்டுபிடிப்பு! - நாடு கடத்தப்படுகிறார்!


அண்மையில் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மக்கள் போராட்ட அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற இவரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கமாறு இலங்கை அரசுக்கு அவுஸ்ரேலியா கடும் அழுதங்களைக் கொடுத்திருந்தது.
இந்த நிலையில், நேற்றிரவு குணரட்ணம் கொழும்புக்கு அருகேயுள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு சென்று தன்னை வெளிப்படுத்தியதாக அவுஸ்திரேலியாவக்கான இலங்கை தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க தெரிவித்துள்ளார்.
“அவர் பத்திரமாகவும் நலமாகவும் இருக்கிறார்.
குணரட்ணம் மூன்று வெவ்வேறு பெயர்களில் மூன்று கடவுச்சீட்டுகளுடன் இலங்கையில் இருந்துள்ளார்.
பிறேம்குமார் குணரட்ணம் என்ற பெயரில் அவர் இலங்கைக்குள் நுழையவில்லை.
அதனால் அவரது இருப்பிடத்தை எம்மால் அறிய முடியாதிருந்தது.
குணரட்ணம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு விட்ட நிலையில் அவரை விரைவில் இலங்கை அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்துவார்கள்.
அவரை திருப்பி அனுப்புவதற்கு இதுதான் நல்ல வாய்ப்பு.
அவர் தனது நுழைவிசைவு காலம் முடிந்து நீண்டகாலமாக இலங்கையில் தங்கியிருந்துள்ளார்“ என்றும் அட்மிரல் திசார சமரசிங்க மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சும் குணரட்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலதிக விபரங்கள் குறித்த இப்போது கலந்துரையாடுவது பொருத்தமற்றது என்று அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட குமார் குணரட்ணம் நாடு கடத்தப்படுகிறார்!
கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட குமார் குணரட்ணம் இன்று நாடுகடத்தப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை முற்போக்கு சோசலிசக் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் கிரிபத்கொடவில் வைத்துக் கடத்தப்பட்ட குமார் குணரட்ணம் அவுஸ்ரேலிய குடியுரிமை கொண்டிருந்தவர். எனவே அவரை உடனடியாக மீட்டுத் தரவேண்டும் அவுஸ்ரேலிய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு கொழும்பை அண்மித்த பொலிஸ் நிலையம் ஒன்றில் தான் வான் ஒன்றில் கடத்தப்பட்டதாக முன்னிலையாகியிருந்தார்.

இவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே குணரட்ணம் காணாமற்போனது பற்றி அவுஸ்ரேலியத் தூதுவர் கேள்வி எழுப்பியதற்கு, அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்றவரால் சிறிலங்காவில் அரசியல் செய்ய முடியாது என்று அவர் கோபத்துடன் கூறியதாக செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

இவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும்படி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட குமார் குணரட்ணம் இன்றுகாலை 7.10 மணியளவில் அவுஸ்ரேலியா செல்லும் யுஎல்.882 விமானம் மூலம் நாடு கடத்த சிறிலங்கா அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், முற்போக்கு சோசலிசக் கட்சி கூறியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten