தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 april 2012

குடிவரவு சட்டங்களை மீறியதனால் பிறேம்குமார் நாடு கடத்தப்பட்டார்!– பொலிஸார் !


 [ கொழும்பு நிருபர் ]
குடிவரவு சட்டங்களை மீறிச் செயற்பட்ட காரணத்தினால் பிரேம்குமார் குணரட்னம் நாடு கடத்தப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுப்பட்டிருந்தால் பிறேம்குமார் குணரட்னத்தை நாடு கடத்தியிருக்க மாட்டோம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களாக குணரட்னம் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தார்.
இதன் காரணமாகவே குமார் குணரட்னத்தை அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச ரீதியில் பிரயோகிக்கப்பட்ட கடுமையான அழுத்தங்கள் காரணமாகவே குணரட்னம் விடுதலை செய்யப்பட்டதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten