தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 april 2012

நான் தான் கடத்தினே இப்ப என்ன ? என்று சொல்லாமல் சொல்லும் கோத்தா !


குமார் குணரட்ணம் கடத்தப்பட்டதும், பின்னர் அவர் அவுஸ்திரேலியப் பிரஜை என்று தெரிந்தது மட்டுமல்லாது, அவுஸ்திரேலியா அரசு கொடுத்த கடும் அழுத்தத்தினால் அவரை விடுவிக்கவேண்டிய நிலைக்கு கோத்தபாய தள்ளப்பட்டார் என்பது யாவரும் அறிந்ததே. கோத்தபாய ராஜபக்ஷ நேற்றைய தினம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தை கடுமையாகச் சாடி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அவுஸ்திரேலிய அரசு தனக்கு பிழையான தகவல்களை வழங்கிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியும் உள்ளார். கோத்தபாய தான் இக் கடத்தலுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பதனை நிரூபிக்கும் வகையில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் அமைந்துள்ளது. சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

இலங்கையில் ஜே.வி.பி கட்சி இரண்டாக உடைந்த நிலையில், பிளவுபட்ட உறுப்பினர்கள் புணர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளோடு இணைந்து மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக தனக்கு தகவல் கிடைத்ததாக கோத்தபாய தற்போது ஒத்துக்கொண்டுள்ளார். இச் செய்தி தொடர்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு உஷார் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், பிளவுபட்ட உறுப்பினர்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சு நோட்டமிட ஆரம்பித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட தரவுகளின் படி, குமார் குணரட்னம் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் அவர் எப்போது நாட்டிற்குள் வந்தார் என்று கோத்தபாயவால் அறியமுடியவில்லையாம். (காரணம்: குமார் குணரட்ணம் பெயரில் சில மாற்றங்கள் இருந்ததால்) இதனால் அவர் அவுஸ்திரேலிய தூதரகத்தை தொடர்புகொண்டு இப்படியான நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தாரா என வினவியுள்ளார். அவுஸ்திரேலிய தூதரகம் மெளனாக இருந்துள்ளது. ஆனால் கடத்தப்பட்ட பின்னரே, அவுஸ்திரேலிய தூதரகம் தன்னோடு தொடர்புகொண்டு வேறு ஒரு பெயரைத் தந்து இவர்தான் காணமல் போனவர் என்று குறிப்பிட்டுள்ளனராம். அப்படி என்றால், அதுவரை கோத்தபாய தேடிவந்த நபர் வேறு ஒரு பெயரில் நாட்டிற்குள் வந்திருக்கவேண்டும். இருப்பினும் கோத்தபாயவின் ஆட்கள் குமார் குணரட்ணத்தை யார் என்று சரியாகத்தெரியாமல், படு சிம்பிளாகக் கடத்திச் சென்றுவிட்டனர். இதன் பின்னரே பிரச்சனை பூதாகரமானது.

இலங்கையில் உள்ள அரச தொலைக்காட்சியான ஐ.ரி.என் க்கு வழங்கிய செவ்வியிலேயே கோத்தபாய சிலவிடையங்களைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளோடு சேர்ந்து செயல்பட இருப்பதாக ஒரு நபரை கோத்தபாய சந்தேகப்பட்டால், அவர் சாதாரணமாக நடமாட முடியுமா ? நிச்சயம் வெள்ளைவான் அவரைக் கடத்தியே தீரும். இந்த வகையில், குமார் குணரட்ணம் மீது தாம் சந்தேகம் கொண்டிருந்ததை கோத்தபாய ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமா ? இப்படியான ஒரு நபர் இலங்கையில் இருப்பது தொடர்பாக அவர் அவுஸ்திரேலிய அரசை வினவியும் உள்ளார் அல்லவா. இதனை வைத்தே அவுஸ்திரேலிய அரசானது குமார் குணரட்ணம் கடத்தப்பட்டதும், மோப்பம் பிடித்து, உடனடியாகவே கோத்தபாயவை நேரடியாகத் தொடர்புகொண்டது என்கிறார்கள்.

அதுவும் நீங்கள் முன்னர் விசாரித்த நபர் தான் தற்போது காணமல்போயுள்ளார் என்ற விடையத்தை போட்டுடைக்க அவுஸ்திரேலிய அரசு தவறவில்லை. வாயடைத்துப்போன கோத்தபாய குமாரை உடனே விடுவித்துவிட்டார். பின்னர் நடந்த நாடகங்களைத் தான் மக்கள் நன்கு அறிவார்களே ! சொல்லவா வேண்டும் ?



http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2243

Geen opmerkingen:

Een reactie posten