தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 april 2012

மேலும் 4 நாடுகளில் இலங்கை தூதரங்கள் திறக்க தீர்மானம் !


துருக்கி, நைஜீரியா, அஸர்பைஜான், சீஷெல்ஸ், மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் தூதரகங்களை அமைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. ஜெனீவா தீர்மானத்திற்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரீஸ் கூறுகையில், அப்படி செய்து விவேகமற்றது என்றார். எனினும் புதிய உலக போக்கிற்கமைய, தூதரகங்களை மீளமைக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

'எமக்கு நிதி கட்டுப்பாடுகள் உள்ளன. உலகில் 193 நாடுகள் உள்ளன. எனினும் 46 நாடுகளில் மாத்திரமே எமக்கு தூதரகங்கள் உள்ளன. எமது தேவைக்கிணங்க நாம் இவற்றை மீளமைக்க வேண்டும். துருக்கியில் நாம் தூதரகமொன்றை அமைக்கவுள்ளோம். மறைந்த முன்னாள் அமைச்சர் மனோ விஜேரட்னவின் பாரியார் எமது தூதராக இருப்பார். 160 மில்லியன் மக்களைக் கொண்ட நைஜீரியா குறித்தும் நாம் யோசிக்கின்றோம். அஜர்பைஜானில் இலங்கையின் நீல கற்களுக்கு அதிக கேள்வி உள்ளது' என்றார்.

இந்து சமுத்திரத்தின் தெற்கிலுள்ள மொரிஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுடன் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக தொடர்புகளை விருத்தி செய்வது அவசியம். சில நாடுகளில் பல தசாப்தங்களுக்கு முன்னர் தூதரகங்களை திறந்தோம். தற்போது அவற்றின் அரசியல்பூகோள முக்கியத்தும் குறைந்துவிட்டது. சில நாடுகளில் எமது தேயிலைத்துறைக்காக தூதரகங்களை திறந்தோம். ஆனால் இன்று அவர்களின் வரி கொள்கை காரணமாக அந்நாடுகளில் எமது தேயிலை வர்த்தகம் வீழ்ச்சியடைந்துவிட்டது. அத்துடன் சில நாடுகள் அரசியல் ரீதியில் முக்கியமானவை அல்ல' என அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten