தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 april 2012

அந்தரங்கமான நோக்கம் என்ன ??


ஐநாவில் இலங்கைக்கு எதிராக ஓட்டளித்துவிட்டு இப்போது கோபித்துக் கொண்ட பெண்டாட்டியின் கூந்தலை வருடி தாஜா செய்யும் கணவனை போல உடனடியாக ஒரு கடிதம் ஒன்றை இலங்கைக்கு எழுதியிருக்கிறார் நம்ம பிரதமர். அதில் உள்ளதன் உணமையான அர்த்தம் இது தான் :-

"இந்த தீர்மானம் அப்படியொன்றும் உங்களுக்கு எதிரானதல்ல, உங்களுக்கு எதிராக இருந்த அனைத்து வாசகங்களையும் நீக்கி விட்டு தான் நீர்த்து போக வைத்து விட்டுதான் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. ஆகவே நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் எப்போதும் போல அங்கே தமிழர்களை கொலை செய்யலாம், தமிழ்ப் பெண்களை கற்பழிக்கலாம், சித்திரவதை செய்யலாம். உங்களோடு சேர்ந்து இன படுகொலை செய்த நாங்கள் எப்படி உங்களை விட்டு விட்டு தனியே தப்பிக்க முடியும்? போர் நடந்த நேரத்தில் தமிழர்களை கொல்ல நாம் இருவரும் ராஜ்ய ரீதியாக அமர்ந்து பல முறை பேச்சு நடத்தியிருக்கிறோம். அதை நீங்கள் பதிவு செய்து இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். உங்களை நங்கள் காட்டிக் கொடுத்தால் நீங்கள் எங்களை காட்டிக் கொடுப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியாதா என்ன ? ஆகவே இந்த ஐநாவில் நாங்கள் உங்களுக்கு எதிராக ஓட்டு அளித்ததை மறந்து 'நாம் இருவருமே ஒன்றில் ஒன்று' என்பதை நினைவில் கொண்டு இனியும் நாம் ஒன்றாகவே இருப்போம்" என்பது தான்.

தமிழர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் இது தான் ! தமிழக தலைவர்களின் எத்தனையோ கடிதங்களுக்கு பதில் சொல்லாத பிரதமர் இலங்கைக்கு மட்டும் இத்தனை அவசரமாக கடிதம் எழுதுவதன் அந்தரங்கமான நோக்கம் என்ன
 ??

Geen opmerkingen:

Een reactie posten