தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தைச் சர்வதேச நாடுகள் அங்கீகரித்து விட்டன. ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனை வெளிப்படுத்தியிருக்கிறது. இராஜதந்திர ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண் நகர்வுகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.
தந்தை செல்வாவின் 114ஆவது பிறந்த தின நிகழ்வு நேற்று மாலை நவலர் மண்டபத்தில் நடை பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கை மீதான அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. எம்மைப் பொறுத்தவரையில் எதிராக வாக்களித்த மற்றும் வாக்களிப்பைப் புறக்கணித்த நாடுகளும் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதாகவே கருதுகிறோம்.
இலங்கை மீதான அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. எம்மைப் பொறுத்தவரையில் எதிராக வாக்களித்த மற்றும் வாக்களிப்பைப் புறக்கணித்த நாடுகளும் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதாகவே கருதுகிறோம்.
வல்லாதிக்க நாடுகள் ஒன்றை ஒன்று எதிர்ப்பதும், ஏற்படும் உலக அரசியலில் நடப்பவை, அந்த அடிப்படையில்தான் தீர்மானத்தைச் சில நாடுகள் எதிர்த்துள்ளன. மேலும் சில நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற்றுள்ள அனைத்து நாடுகளும் இலங்கை மீதான தீர்மானத்தை ஏற்றுள்ளன என்றே நாம் கருகிறோம்.
தீர்மானத்தில் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், அதில் சில விடயங்களம் எமக்குச் சாதகமாகதான் இருக்கின்றன. அதாவது ஜனாதிபதி நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் இனப்பிரச்சினைத் தீர்வு, மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுதல், மக்களின் காணியை வழங்குதல், கைது செய்து கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட விடயங்கள் இருக்கின்றன. எனவே இந்தத் தீர்மானத்தை நிச்சயம் அரசு அமுல்படுத்த வேண்டும்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும். எம்முடன் பேசியே அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
ஈழத் தமிழர்கள், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள், சர்வதேசதச் சமூகத்தின் மத்தியில் முன்னெடுக்கப்படும் இலங்கை மீதான அழுத்தம் இந்த மூன்றையும் இணைத்து அரசியல் தீர்வை எட்டுவதற்கான வழிமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இன்று தேசிய இனமாக உள்ள தமிழ் மக்களின் சுய அடையாளங்கள் அனைத்தும் மஹிந்த அரசால் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டு வருகின்றது என்றார் மாவை.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்
பிரேமச்சந்திரன் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தவை வருமாறு:
எமது தமிழ் மக்களது தியாகங்கள் உலக நாடுகளின் பார்வையில் விழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் எமக்குப் பெரிய பொறுப்புள்ளது. நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களை இணைத்துச் செயற்பட வேண்டும்.
பிரேமச்சந்திரன் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தவை வருமாறு:
எமது தமிழ் மக்களது தியாகங்கள் உலக நாடுகளின் பார்வையில் விழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் எமக்குப் பெரிய பொறுப்புள்ளது. நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களை இணைத்துச் செயற்பட வேண்டும்.
நாடுகளும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் இலங்கையில் என்ன நடக்கிறது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கிறது? என உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் சிறிய தவறுதானும் விடக்கூடாது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுப்பெற வேண்டும் என்றார்.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தர்த்தன், ரெலோ அமைச்சின் அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்
Geen opmerkingen:
Een reactie posten