தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 april 2012

மட்டு. நகரில் உடைக்கப்பட்ட காந்தி சிலையை அவசரமாக திருத்துவதன் மர்மம் என்ன?- பா. அரியநேத்திரன் கேள்வி !


மட்டக்களப்பு நகரில் உடைக்கப்பட்ட காந்தி சிலையை அவசர அவசரமாக திருத்துவதன் மூலம், சிலைகளை உடைத்தவர்களைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா என நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு நகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த நான்கு பெரியார்களின் சிலைகள் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி, சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல், சுவாமி விபுலானந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகிய பெரியார்களின் சிலைகளே இவ்வாறு உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பிலுள்ள தந்தை செல்வாவின் சிலை ஆறு மாதங்களுக்கு முன்னர் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சுவாமி விவேகானந்தரின் சிலை வைக்கப்பட்டு சில மணித்தியாலங்களுக்குப் பின்னர் உடைக்கப்பட்டது.
இந்தச் சிலை புதிதாக வைக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் இந்த நான்கு பெரியார்களின் சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளன.
ஒரு வருடத்துக்கு முன்னர் கிறீஸ் பூதங்கள் என மட்டு நகரில் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். அதன் பின்னர் இது போன்ற சிலைகளை உடைத்து சேதமாக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இச்சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தவும், படையினரின் இருப்பை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்காகவும் இடம்பெற்றிருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten