தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 april 2012

லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் !


லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னர் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. லண்டனில் இயங்கிவரும் சோஷலிசக் முன்னணிக் கட்சியின் ஆதரவில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும், தமிழர் தகவல் நிலைய உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இலங்கையில் ஆட்கடத்தல்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இப்போராட்டம் நடைபெறறதாக அப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில், இலங்கையில் ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு இலங்கை அரசே பொறுப்புக்கூறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten