தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 april 2012

பிரான்சுக்கான இலங்கைத் தூதுவரை நீக்க ஜனாதிபதி முடிவு! அமைச்சர் பீரிஸை பதவியிலிருந்து நீக்கப் போவதாக தகவல்? !


பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றும் தயான் ஜயதிலகவை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலராக உள்ள சேனுகா செனிவிரத்னவை அந்தப் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் கடந்த 30ஆம் திகதி, வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நடத்திய கூட்டம் ஒன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு நெருக்கமான தயான் ஜயதிலக, ஜெனிவா தீர்மானம் குறித்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவித்துள்ள கருத்து, இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாகவும் சஜின் வாஸ் குணவர்த்ன கூறியுள்ளார்.
இந்தக் கருத்துத் தொடர்பாக விளக்கமளிக்குமாறு தயான் ஜயதிலகவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பும் படியும் அவர் சேனுகா செனிவிரத்னவிடம் பணித்துள்ளார்.
சஜின் வாஸ் குணவர்த்தன இந்தக் கூட்டம் பற்றி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கோ, வெளிவிவகாரச் செயலர் கருணாரத்ன அமுனுகமவுக்கோ அறிவிக்கவில்லை. சேனுகா உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் சில அதிகாரிகளே இதில் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜி.எல்.பீரிசை வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவுள்ளதாகவும், சஜின் வாஸ் குணவர்த்தன இந்தக் கூட்டத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் பிபிசிக்கு கருத்து வெளியிட்ட தயான் ஜயதிலக,
ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது தான் முடிவாக இருக்கப் போவதில்லை. மியான்மரிடம் இருந்து சிறிலங்கா பாடம் கற்றுக் கொள்ள முடியும்' என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten