[ வீரகேசரி ]
மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் உருவச் சிலை மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவல் ஆகியோரின் சிலைகளின் தலைகள் சில நாட்களின் முன் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் உருவச் சிலை மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காந்திசேவா அமைப்பின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தியின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு காந்தி சேவா அமைப்பின் சார்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பின்னர் மட்டக்களப்பு பொலிஸார் இந்த உருவச்சிலையை பார்வையிட்ட பின்னர் அதனை புனரமைப்புச் செய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten