தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 november 2011

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள்

பிரான்ஸ் ஒபேவில்லியஸில் இடம்பெற்ற மாவீர் நாள் நிகழ்வு!

மாவீரர் நாள் 2011 டென்மார்க்கில் கேர்ணிங் கொள்பேக் நகரங்களிலுள்ள பிரமாண்டமான மண்டபங்களில் நடாத்தப்பட்டன

நோர்வேயில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 09:42.02 PM GMT ]
நோர்வே தலைநகரம் ஒஸ்லோவில் மாவீரர்நாள் நிகழ்வுகள் வெகுசிறப்பாக நடைபெற்றது. 3000 வரையிலான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
தேசியக்கொடியினை வீரவேங்கை நரேனின் சகோதரர் ஏற்றியதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழகத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் திரு.போல் நியூமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
அத்தோடு நோர்வேயில் உள்ள குடும்பங்களின் மாவீரர்களின் விபரம் தொடர்பான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் தமிழ், நோர்வேஜியன் ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓஸ்லோ தவிர்ந்த Stavanger,Bergen, Trondheim,Molde,Hareid ஆகிய நகரங்களிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

யேர்மனியில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011

[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 09:34.00 PM GMT ]
யேர்மனி, டோர்ட்முண்ட் நகரில் 27.11.2011 அன்று தமிழர்களின் தாயகத்துக்காக தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் பதித்து நினைவு கூரும் முகமாக மாவீரர் நாள் 2011 மிக எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் 8000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தங்கள் தேசியக் கடமையை நிறைவேற்றினர்.
தேசிய மாவீரர்நாள் நினைவு வணக்க நிகழ்வில் முதலாவதாக பொதுச்சுடரினை பேராசிரியர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார்
ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கீதத்துடன் தேசியக்கொடியை மாவீரர், வீரவேங்கை திருமாறன் அவர்களின் தாயார், திருமதி. தெய்வேந்திரம் பவானியம்மா அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதனை அடுத்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மாவீரர்துயிலுமில்லத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை மாவீரர் லெப்டினன்ட் மேகலா அவர்களின் சகோதரி, திருமதி. நந்தகுமாரி சிவராயா அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டது .
அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் இணைந்து தமிழீழம் மலர அயராது தேசியத் தலைவரின் உறுதியோடு தளராமல் பயணிப்போம் என உறுதிமொழி கூறினர்.
மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தமது தியாக செல்வங்களுக்கு மலர்தூவி சுடர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்கமேடையில் தமிழீழம் இசைக்குழு, இராக வேங்கை இசைக்குழுவின் இசைவணக்கம், சிறுவர் உரை, கவிதை, எழுச்சி நடனங்கள், நாடகம், நாட்டிய நாடகம், மாவீரர் வெற்றிக்கிண்ணப் பரிசளிப்பு, இறுவட்டு வெளியீட்டு நிகழ்வுகள், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன், வை.கோ ஆகியோரது மாவீரர்நாள் செய்திகள் ஒளிவடிவில் ஒலிபரப்பட்டமை, யேர்மனியில் கைதுசெய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர்களுக்கான மனிதநேயப் பணியாளர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்களுக்கான கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகள் சிறப்பாகவும் எழுச்சிபூர்வமாகவும் இடம்பெற்றன.
சிறப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், மனித நேயப்பணியாளர்கள் யேர்மன் அரசாங்கத்தால் கைது செய்யப்படதை தொடர்ந்து அதற்கு எதிராக தமது வழக்கை வெற்றிகரமாகக் கொண்டு சென்று தமது விடுதலைக்கு காரணமான திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழுவுக்கு சிறப்பான கௌரவம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது .
அதை தொடர்ந்து மனிதநேயப் பணியாளர்கள் சார்பில் இவ்வழக்குத் தொடர்பாக வாதிட்ட வழக்கறிஞர்களின் இணைப்பாளர் வழக்கறிஞர் திரு Nagler அவர்கள் இவ்வழக்குத் தொடர்பாகத் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அத்தோடு இவ் மாபெரும் நினைவெழுச்சியில் தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்திருந்த புதிய பார்வையின் ஆசிரியரும், தமிழக முதல்வரின் தோழி சசிகலா அவர்களின் துணைவரும், ஐயா பழ. நெடுமாறன், திரு. வை. கோ, த. பாண்டியன் போன்ற தமிழீழ ஆதரவுத் தலைவர்களோடு இணைந்து தமிழீழ மலர்வுக்காய் உழைத்து வருபவரும், தஞ்சாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற நினைவிடக் கட்டுமானப் பணிகளைப், பழ. நெடுமாறன் அவர்களோடு சேர்ந்து முன்னெடுத்து வருகின்ற தமிழ் உணர்வாளரும், தமிழகத்திலிருந்து வருகை தந்தவருமான, திரு. ம. நடராஜன் அவர்களும்,பேராசிரியர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும் , சிறப்புரைகள் வழங்கினர்.
மாவீரர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற தனித் தமிழீழமே தமது நோக்கு எனும் பாதையில் பயணிக்கும் வகையில் இப் புனித மாதத்தில் யேர்மன் சட்டங்களுக்கு அமைய பதிவுசெய்யப்பட்ட யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை 2011 றாம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சந்திப்புகளின் மற்றும் வேலைத்திட்டங்களின் விபரங்களை "தகவல் மையம்" ஊடாக மக்களுக்கு தெரிவித்தனர் .
இறுதியாக தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்தை அனைத்து மக்களும் இணைந்து உரத்துக்கூறி "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் " பாடலுடன் நிகழ்வினை நிறைவேற்றினர்.

கனடாவில் பேரெழுச்சியுடன் நடைபெறும் மாவீரர் நாள்

[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 12:22.36 AM GMT ]

donderdag 24 november 2011

மாவீரர் தினம் 2011: தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் வெற்றியாண்டு

இப்போது புரிகிறது இது வெற்றி ஆண்டு,அன்று இல் உலகின் நான்காவது ராணுவத்தை (பிரேமதாசா போகச்சொன்னதும் இந்திய அரசியல் மாறியதும் போபால் பிரச்சனையெல்லாம் இங்கு சேராது,யானை தானே தன் தலையில் மண்ணை போடுறதும் இப்படித்தான்)வென்ற ஆண்டு.இப்படியே போனால் வடக்கு கிழக்கில் தமிழர் தொகை குறைந்து சிங்களவர்பெருங்குடியாவதும் இவர்கள் வெற்றிக்குத்தானோ  அல்லதிவர்களின் வெற்றியோ??

பிரபாகரனை கொலை செய்ய உத்தரவிட்டார் ரஜீவ்காந்தி (அவலங்களின் அத்தியாயங்கள்- 8) –நிராஜ் டேவிட்

இப்படி தவறாக எழுதுபவர்களாலும் நிஜத்தை ஏற்காத புலிகளாலும் தமிழர் இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமல்லாமல் உலகம் பூராவும் எமாளிகளாக்கப்பட்டு தவறான பாதைக்கு மாற்றப்படுகின்றனர்.தன்னை விட பெரியவன் எவன் என்பவன் தமிழன்,அடி விழுந்தாலே பணிவான்.நிராஜ் போன்றோர் வரலாறுகளை பாழாக்குவதுடன் இந்திய ராணுவத்தை வென்றதாக பகிடி விட்டு அதன் காரணமாக புலிகளை தலைக்கனம் கொள்ளவைத்து தமிழர் அழிவுக்கு நேரடி காரணமாயினர்.இவர்கள் தங்கள் குடும்பங்களுடன் சுவிசில் பிச்சைக்காசிலும் கள்ளவேலை செய்தும் பிழைப்பை பெருக்கியபடி இலங்கை  புலிகளை உலகப்பயங்கரவாதிகள் ஆக்கினர்.இதெல்லாம் வெளிநாட்டில் தங்கள் வறட்டுப் பெருமை பேசவே.இன்று அழிவின் பின் இத்தனை பொய்களுடன் இப்படி எழுதி யார் குடும்பத்தை அழிக்கப் போகிறாறோ!!இந்திய ராணுவம் கட்டளைக்கு கீழ்ப் படிந்து நடக்கும் சிறந்த படை என்பது உண்மையெனில் ஓய்வு பெற்ற ராணுவம் தன்னால் வழிநடாத்தப்பட்டவர்களை கேவலப்படுத்தியது பொருந்தவில்லையே!!கட்டளைகளை  நிறைவேற்ற வேண்டிய அவர் எப்படி உத்தரவை மறுத்தாராம்??பிரேமதாசா இந்திய ராணுவத்தை இருக்க சொல்லியிருந்தால் புலிகள் வெற்றி எப்படி கிடைத்திருக்கும் என்பதை நாமும் பார்த்திருக்கலாம்,இருந்திருந்தால் புலிகளும் ஆதரவுகளும் அழிந்திருக்க மக்கள் சிங்களவனுக்கு அடிமை ஆயிரார்.

dinsdag 22 november 2011

ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள்! முக்கிய அம்சங்களை பகிரங்கப்படுத்தியது ஆங்கில பத்திரிகை!

இதுதான் படித்து படம் பெற்ற  நீதித் துறையும் அதன் சேவையும்,பலகாலம் இழுத்தடித்து நீதிக்குப்புறம்பாக,உண்மைக்கு மாறாக தீர்ப்பளிப்பதே படித்தவர் செய்வது!!சரத் பொன்சேகாவுக்கு உயர் நீதிமன்றமும் தமிழருக்கு நல்லிணக்க ஆணைக்குழுவும் இதையே செய்துள்ளன.ராணுவத்தால் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களே பொய் என்று சொல்லும் ஆணைக்குழுவின் உண்மைக்கு சர்வதேசமும் ஐ நா வும் சனல் நான்கும் என்ன செய்யப்போகின்றன.தமது கையாலாகாத்தனத்தையும் சுயலாப நோக்கையும் முன்னவை இரண்டும் மீண்டும் கடைப்பிடிக்கும்.ஜன நாயகத்தை அறிமுகப்படுத்தியதற்காக உலகில் பல நாடுகளை பிரித்தாண்ட பிரித்தானியா அவமானப்பட்டு பொதுமன்னிப்பா கேட்கும்???

zondag 20 november 2011

தமிமீழ மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய நவம்பர் 11ம் திகதி நோர்வே கூட்டம்!- ச. வி. கிருபாகரன்

இவரின் கிணற்றுத்தவளை பற்றிய விளக்கமே தவறு,இவரெல்லாம் ஆய்வுவேற செய்றார்,தமிழர் தலையெழுத்தை யாரால் மாற்றமுடியும்.
 
[ ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011, 02:54.41 AM GMT ]

dinsdag 15 november 2011

பிரபாகரன் பயங்கரமானவராக இருக்கலாம்: ஆனால் அவர் இடையூறு செய்யவில்லை !

15 November, 2011 by admin
தான் பிரதம நீதியசராகப் பதவி வகித்த போது வடக்கில் நீதிமன்றங்களை அமைக்கும் திட்டத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தடைகளை ஏற்படுத்தவில்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களில் தான் அந்தக் காலங்களில் நீதிமன்றங்களை நிறுவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் பயங்கரமானவராக இருக்கலாம். ஆனால் அவர் எந்த இடைஞ்சலையும் செய்யவில்லை. சண்டை இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றங்களுக்கு அடிக்கல்லை நாட்ட முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மற்றும் வன்னியிலும் கூட நீதிமன்றங்களை திறக்க புலிகள் அனுமதித்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில காலங்களாகவே முந் நாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா அரசாங்கத்துக்கு எதிரான பல கருத்துக்களை கூறிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புலிகள் அடக்கியே ஆண்டனர் என்பதற்கு இக்கடிதமே போதாதா??

இன்றிய பிளவுகளும் ,சேற்றை வாரி ஒருவர் மீது இன்னொருவர் எறிவதும்,
யாழ் விபச்சார விடுதிகளும் கூறும் உண்மை தமிழ் மக்கள் ஒற்றுமை 
விரும்பிகளோ  இனப்பற்று கொண்ட இனமோ அல்ல என்பதுதான்.போராட்டத் துயர் தீர்வதற்குள் தலைமைப்போட்டிகளும் புலிகளின் பெயரில் அறிக்கைகளும் தொண்டறேன்று போராடியோரின் எச்சரிக்கை
மடல்களும் அப்பப்பா சிங்களவரே பரவாயில்லை என்ற முடிவுக்கே வர முடிகிறது.எதிரி செய்யாத கொலை,தூற்றல்,கேவலப்படுத்தல்,எச்சரித்தல் அனைத்தையும் தமிழனே தமிழனுக்கு எதிராய்  இன்று செய்வதுடன்
காட்டிக்கொடுப்பிலும் முன்னணியில்.இது தேவையா??

விடுலைப் புலிகள் மீதான நோர்வேயின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் ருத்ரகுமாரன்

maandag 14 november 2011

போர்நிறுத்த உடன்பாட்டின் பின்னணியில் இருந்தது ‘றோ‘ சொல்ஹெய்ம்

நோர்வே மூலம் புலிகளுடன் இரகசியப் பேச்சு நடத்தினார் பிறேமதாச – அறிக்கையில் அம்பலம்

சனல் 4 வெளியிடவிருக்கும் “தண்டிக்கப்படாத போர் குற்றங்கள்''!- வெளிவிவகார அமைச்சு கவனம்

[ திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011, 02:24.57 AM GMT ]

தமிழீழ விடுதலைப் புலிகளை தவறாக எடைபோட்டது அனைத்துலக சமூகம்!- அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலர் ஆர்மிரேஜ்