தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 oktober 2011

நெதர்லாந்தில் ஐந்து தமிழர்களுக்கு 20 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்படக்கூடிய சாத்தியம்

[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 02:14.18 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் மீது நெதர்லாந்து நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில்  நிறைவுக்கு வருகிறது.
சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியமை, குண்டுத் தாக்குதல், கொலை என்பவற்றுக்கு துணைபோனமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் ஐந்து சந்தேகநபர்களும் 20 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொலைகள் இடம்பெறுவதற்கு இந்த சந்தேகநபர்கள் தமிழ் இளைஞர்களை ஊக்குவித்ததாக அரச தரப்பு சட்டத்தரணி நெதர்லாந்து நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
சுமார் 6 வாரங்களாக விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten