முல்லைத்தீவில் அரச அதிபராகத் தான் இருந்த காலப் பகுதியில் அங்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக தன்னிடம் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனவும், அங்கு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் யாழ்ப்பாண அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாகப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அளவுக்கதிகமாகக் கிடைத்திருப்பது குறித்து எமது செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள பல அரச அலுவலகங்கள், கிராம அலுவலர்கள், பெண்கள் விடுதி எனப் பல இடங்களிலிருந்து யாழ். மாவட்டச் செயலருக்கு முறப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் பல நிறுவனங்களில் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் தூண்டல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். பெண்கள் ஒரு பாலியல் பொம்மைகள் போன்று பார்க்கப்படுவது மிகவும் கொடூரமான செயல். அவ்வாறு பெண்களைப் பார்ப்பவர்கள் கொடூரமமானவர்கள். உயர்பதவியில் இருப்பவர்கள் முதற்கொண்டு சாதாரண அலுவலர்கள் வரை பெண்களுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வேளையில் -நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து கூறிவருகிறீர்கள். ஆனால் அவ்வாறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையே? " என்று எமதுசெய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களில் ஈடுபட்டோர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், அதற்காக தனி அலகு ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அரச மருத்துவமனை, பிரபல பெண்கள் விடுதி, கிராம அலுவலர் என பல நிறுவனங்களிலிருந்து பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

Geen opmerkingen:
Een reactie posten