[ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 05:19.05 AM GMT ]
கனடாவில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாகாண பாராளுமன்றத்திற்கான தேர்தலில் முதல்வர் டால்ரன் மெக்குயின்றி தலைமையிலான லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
மொத்தமாக உள்ள 107 தொகுதிகளில் லிபரல் கட்சி 57 ஆசனங்களையும் கொன்சர்வேர்ட்டிவ் கட்சி 37 ஆசனங்களையும் புதிய ஜனநாயக கட்சி 17 ஆசனங்களையும் கைப்பற்றியது.
கடந்த ஆட்சிக் காலத்தில் 70 ஆசனங்களுடன் பெரும்பான்மை அரசாங்கமாக விளங்கிய லிபரல் கட்சி இந்த தடவை பெரும்பான்மை ஆட்சியமைக்க குறைந்தது 54 ஆசனங்களை எதிர்பார்த்திருந்த நேரத்தில் அக்கட்சி 53 ஆசனங்களைப் பெற்று சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்க தயாராகியுள்ளது.
இதேவேளை இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி படுதோல்வியடையும் என்றும் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியானது மத்தியில் அமைந்துள்ள கார்ப்பர் தலைமையிலான மத்திய கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கத்துடன் சினேகபூர்வமான உறவுகளைப் பேணியவண்ணம் வலுவான ஒரு மாகாண அரசாங்கத்தை நிர்வகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைக்கும் நிலையிலிருந்து பின் தள்ளப்பட்டுள்ளது.
மாகாணத்தில் போட்டியிட்ட முக்கியமான மூன்று கட்சிகளின் தலைவர்களும் வெற்றிபெற்றுள்ளார்கள்: Liberal Dalton McGuinty (Ottawa South), PC Leader Tim Hudak (Niagara-West Glanbrook) and NDP Leader Andrea Horwath (Hamilton Centre).
இந்தத் தேர்தலில் கொன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் முறையே போட்டியிட்ட திருவாளர்கள் சண். தயாபரன், நீதன் சண்முகராஜா ஆகியோர் தங்கள் தொகுதிகளில் தோல்வியைத் தழுவிக்கொண்டனர்.
அவர்கள் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இங்கே காணப்படும் படங்களில் நேற்று இரவு ஈழத்தமிழ் அன்பர்கள் பலர் தங்கள் தொகுதிகளில் வெற்றிபெற்ற மாகாண லிபரல் அங்கத்தவர்களின் வெற்றி விழாக்களிலே கலந்து கொண்டனர்.
அவர்களில் டீசயன னுரபரனை Brad Duguid (Scarborough Centre) Michael Coteau (Donvally East) ஆகிய இரண்டு வெற்றியாளர்களோடு ஈழத்தமிழ் அன்பர்கள் பலர் மகிழ்ச்சியோடு வெற்றியைக் கொண்டாடுவதை படங்களில் காணலாம்.
கனடா உதயன்
இரண்டாம் இணைப்பு
ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி! போட்டியிட்ட இரண்டு தமிழர்களிற்கும் வெற்றிவாய்ப்பு எட்டவில்லை!!
இன்று நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும் பெரும்பாண்மைப் பலத்தைப் பெற்ற ஆட்சியாக இந்த முறையத் தேர்தல் முடிவுகள் அமையவில்லை.
பெரும் எதிர்பார்ப்போடு இந்தத் தேர்தலில களமிறக்கப்பட்ட இரண்டு தமிழ் வேட்பாளர்களும்; வெற்றிக் கணியை பறிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டனர். எனினும் இந்தத் தேர்தல் அடுத்து வரும் தேர்தல்களில் தமிழர்களிற்கு வெற்றி வாய்ப்பைப் பெறுவதற்கான கட்டியம் கூறுவதாக இருந்தது.
ராதிகா சிற்பசபைஈசன் மத்திய அரசிற்கு தேர்வு செய்யப்பட்ட ஸ்காபரோ - ரூச் ரிவர் தொகுதியில் போட்டியிட்ட நீதன் சாண் லிபரல் கட்சி வேட்பாளரான பாஸ் பால்கிசுனிடம் 1,000ற்கும் சற்று மேலான வாக்குகளால் தோல்வி கண்டார்.
நீதன் சாண் மார்க்கம் 7 வட்டார கல்விச்சபைக்கான பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அதனைத் துறந்து கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஸ்காபரோ – கில்வூட் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.
அதன் போது தோல்வியடைந்ததையடுத்து, நீதன் சாண் ரொறன்ரோ மாநகரசபைச் தேர்தலில் 42ம் வட்டாரத்திற்கான கவுன்சிலராவதற்குப் போட்டியிட்ட போதும் அதிலும் வெற்றிக்கணியைத் தட்டிப் பறிக்க முடியாத ஒரு நிலையில் மீண்;டும் மாகணசபைக் களத்திற்குத் தாவினார்.
கடந்த முறை போட்டியிட்ட ஸ்காபரோ-கில்வூட் தொகுதியைத் தவிர்த்து இம்முறை ஸ்காபரோ-ரூச்ரிவர் தொகுதியில் அதே புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். நீதன் சாண் இந்தமுறையும் தோல்வி கண்ட போதும் கணிசமான வாக்குக்களை புதிய ஜனநாயகக் கட்சியின் பக்கம் திருப்பியிருந்தார்.
இதேவேளை ஒன்ராறியோ மாகாணக் கண்சவேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட சாண் தயாபரன் லிபரல் கட்சியின் அமைச்சரான மைக்கல் சாணிடம் தோல்வி கண்டார். இந்தத் தமிழ் வேட்பாளரும் முன்னர் லிபரல் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றில் அதீத விரும்பம் கொண்டவராக மிக அண்மைக் காலம் வரை இருந்த போதும்,மேற்படி கட்சிகள் தமிழர்களிற்கு இடம்தரவில்லையென்ற காரணத்தை பிரதானமாக வைத்து களமிறக்கப்பட்டார்.
இவர் போட்டியிட்ட மாகாண கொன்சவேட்டிவ் கட்சியைத் தவிர அனைத்து மாகாண, மத்திய கட்சிகளும் யுத்தக்குற்ற விசாரணை மற்றும் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்திருந்தன. இந்தக் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் அது இறுதி வரை தனது நிலைப்பாட்டில் இருந்து அசைந்து கொடுக்கவில்லை.
இரு தமிழர்கள் இந்த முறைய தேர்தலில் தோல்வி கண்ட போதும் ராதிகா சிற்சபைஈசனைப் போல நேர்மைவழி நின்று தங்களை சமுதாயச் சேவகர்களாக அடையாளப்படுத்த முனையும் தமிழர்கள் எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கு இவர்கள் வழியமைத்துச் சென்றுள்ளனர்.

Geen opmerkingen:
Een reactie posten