தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 oktober 2011

இன்னுமா தெளியவில்லை!!


இரத்த வெள்ளத்தில் மிதந்து, இதயம் வெடித்து நிற்கும் எமது இனம் உங்களின் நாடகத்தை இனம் காண்பது என்பது கடினமான விடயமாகும். (படங்கள் இணைப்பு)
பல போராட்டக்குழுக்கள் இருந்தபோது அண்டைநாட்டின் அனுசரணையுடன் நம் போராட்டம் விரைந்து வளர்ச்சிகண்டு எதிரியை அல்லாடவைத்து வடக்கின் பெரும்பகுதியையும் கிழக்கின் சில பகுதிகளையும் தமிழ் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.ஆனால் இக்குழுக்கள் உரிய இலக்கை அடைய முன்னமே அடுத்த இயக்கத்தின் தலைமை,போராளிகளை அழிக்க முற்பட்ட்டன.காரணம் தலைமை வெறி!!இவற்றில் PLOTஉம் LTTEயும் முன்னணி வகித்து கொலைகள் புரிய TELO,EPRLF,EROSஆகியன உட்கட்சி போட்டியால் உடைந்து சூழ்ச்சியால் அழிந்து புலிகளால் முற்றாக அழிக்கப்பட்ட்டபோது புலிகளின் பாதகச்செயல்களை பொறுப்பேற்றன.மூட தமிழரும் புலிகளை நம்பியதால் அல்லது நம்பியாகவேண்டிய நிலைக்களானதால் புலிகளின் போக்கிலே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்தியாவை தோல்வியின் விளிம்பில் நின்றபோது மக்களையும் இந்திய தமிழ் அரசியல்வாதிகளையும் கொண்டு வரவேற்ற புலிகள்,மாற்று இயக்கங்கள் இந்திய ராணுவத்துடன் வந்ததாலும் அவர்களுக்கும் உரிமைகள் கொடுக்க வலியுறுத்தப்பட்டதாலும்  கோபமுற்று இந்திய ராணுவத்தை கோபமுறவைக்க பலவித முயற்சிகள் எடுத்தனர். அதனால் பல புலி உறுப்பினரை பலிகொடுத்தனர்.எண்ணம் ஈடேறாததால் இந்திய ராணுவத்தை நள்ளிரவினில் கொன்று யுத்தத்தை ஆரம்பித்து தமிழ் ஈழத்தை,இணைந்த மாநிலத்தை கனவாக்கினர்.சிங்களத் தலைமைகளுடன் இரகசிய உறவுபேணிய புலித்தலைமை முன்னர் மற்ற இயக்கங்களின் தாக்குதல்களை காட்டிக்கொடுத்து முறியடித்தமை  மக்கள் அறிந்ததே!!ஆயுத பயத்தால் வாயைத்திறக்க மக்கள் பயப்பிட அதைவைத்தே இஸ்ரம்போல அஆடினர் புலிகள்.பிரேமதாசாவுடன் ஒப்பந்தம் செய்து இந்தியாவை தமிழரின் எதிரியாக்கி பாண்டியரை நினைவு கூர்ந்த புலிகள் ராஜீவை கொலை  செய்து அதை மிக உறுதிப்படுத்தினர்.பின்னால் பிறேமதாசாவையும் கொலை செய்ததுடன் உலகின் நான்காம் வல்லரசை தோற்கடித்த தம்மை யாரும் வெல்லமுடியாதென பிரச்சாரம் செய்ததுடன் அதையே உண்மையென தாமும் நம்பி பேச்சுக்களில் அதிகாரம் பண்ணி குழப்பியடித்தனர்.யுத்தமற்ற காலங்களில் களையெடுப்பு என்ற பெயரில் தலைமைக்கு போட்டியாக வரக்கூடிய புலிகளையே குற்றவாளிகளாக்கி போட்டுத்தள்ளி இயக்கத்தை பலவீனமாக்கினர்.அரசு,இந்தியா பணத்தால் இவர்களை வாங்கியதாக பிரச்சாரம் செய்து தமிழரில் பெரும்பாலானவர்களை துரோகிகளாக்கினர்.இப்படியாக புலிகளின் முட்டாள்த்தனத்தாலும்  கொலைவெறி கொண்டதுமான நடவடிக்கைகளாலும் வெளிநாட்டிலுள்ள தமிழரை கவர்ந்து பணம் சம்பாதித்த புலித்தலைமை நாட்டில் பலவீனமாகியதால் முதலில் வடக்கை இழந்தனர்.மீண்டும் வடக்கில் ஒருபகுதி சிங்கள பிரிவினையால் ஆனையிறவுடன் புலிகளிடம் வீழ மேற்கொண்டு யுத்தம் தொடர படைபலமில்லாமல் புலிகள் யுத்தநிறுத்தம் செய்தனர்.அரசும் ஒருவாறு யுத்தநிறுத்ததுக்கு வர அக்காலத்தில் பலவந்த ஆட் சேர்ப்புமூலம் ஓரளவு பலமடைந்த புலிகள் முட்டாள்த் தனத்தாலும்  வெளிநாட்டு தமிழரின் யுத்த வெறியாலும் புலிகளுடன் மக்களும் பலியாகி போராட்டம் மரணித்தது.இருந்தும் போராட்டத்தை அழித்த புலிகளின் வாரிசுகள் கொலைவெறி இன்னமும் போகவில்லை.அவை மக்களுக்கு போராடும் அனைவரையும் கடித்துக் குதறுவதை பாருங்கள்:

 இரத்த வெள்ளத்தில் மிதந்து, இதயம் வெடித்து நிற்கும் எமது இனம் உங்களின் நாடகத்தை இனம் காண்பது என்பது கடினமான விடயமாகும். (படங்கள் இணைப்பு) ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தில் இருந்த போது நிதிப்பொறுப்பாளராக இருந்த டக்ளஸ் பெருந்தொகை பணத்துடனும், யாழ்ப்பாண மக்களிடம் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் சுருட்டிய தங்க நகைகளுடனும் ஆயுதம் வாங்குவதற்கென தமிழகத்திற்கு சென்ற டக்ளஸ் நடுக்கடலில் பணமும், பவுணும், மூழ்கிவிட்டது என கணக்கு விட்டதை தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

அதிலிருந்து எதிரும் புதிருமாக இருந்த டக்ளசும், சுரேசும் இன்று அரசியல்வாதிகளாகி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான உள்ளனர்.

அவர்கள் இன்று அருகருகே அமர்ந்து அந்நியோன்யமாக எதைப்பற்றி பேசியிருப்பார்கள். பழைய கணக்கு வழக்குகளை பற்றி பேசியிருப்பார்களா? கடலில் மூழ்விட்டதாக கணக்கு விட்ட பணமும் பவுணும் எங்கே நண்பா என சுரேஷ் கேட்டிருப்பாரா?


தமிழ் மக்களைக் காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளுக்கு ஏல விற்பனை மூலம் விற்பனை செய்து வருபவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரின் சகாக்கள்.

அவருடன் இணைந்து கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் தாம் இணையாதிருப்பவர்கள் போன்று பாசாங்கு செய்பவர்களே இந்தத் சுரேஸ்

இந்தக் சுரேஸ் கூத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் யாழ். மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பிரதேச செயலகங்களின் நிர்வாக எல்லைகளை மீளமைத்தல் தொடர்பான கூட்டத்தில் சுரேஸ் நடந்து கொண்ட விதம் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளது.

அதாவது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவருக்கொருவர் தமது கடந்த கால நினைவுகளை நினைவுகூர்ந்தது போன்றிருந்தது.

இருவரும் ஒரே இயக்கத்தில் அங்கம் வகித்து பின் இரண்டாகப் பிரிந்தது தமிழ் மக்கள் அறிந்த ஒன்று. ஆனால் பிரிந்தது போன்ற நாடகம் ஆடியது அவர்கள் இருவருக்கும் தெரிந்த ஒன்றே.

தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தாம் அர்ப்பணிப்புடன் நடந்து கொள்வதாக அரங்குகளில் ஆர்ப்பரிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன், கேட்போர் கூடத்தில் ஆண்டியாகியது ஏனோ?

அந்தநாள் ஞாபகத்தை இந்நாளில் நினைவுகூர்ந்து இருவரும் இரண்டறைக் கலந்து ஒருவரையொருவர் உற்று நோக்குவதன் காரணம்தான் என்ன?

ஒருவாறு கடந்த காலங்களில் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தி விட்டோம் இனி எவ்வாறு ஏமாற்றலாம்? ஒன்றிணைந்து ஏமாற்றலாமா? இல்லது இதேபோல் பிரிந்து நிற்பது போல் நாடகமாடி ஏமாற்றலாமா என்ற கேள்விக்கனைகளுடன் கூடிய பார்வைதான் இதுவோ?

சொந்தம் கொண்டாடிச் சுகம் தேடும் உங்களுக்கு, கைகளை இழந்து, கால்களை இழந்து, உறவுகளை இழந்து நிற்கும் எம்மினத்தின் வேதனை எவ்வாறு புரியும்?

அரசாங்கத்தை எதிர்க்கின்றோம், அரசுடன் இணைந்திருக்கும் தமிழ் அரசியல் கட்சியின் கொள்கைகளை எதிர்க்கின்றோம் என மேடை போட்டு முழங்கிய நீங்கள், இன்று அதே மேடையில் அதே அரசியல் கட்சியின் தலைமையை மோப்பம் பிடிப்பதன் காரணம் என்ன?

இரத்த வெள்ளத்தில் மிதந்து, இதயம் வெடித்து நிற்கும் எமது இனம் உங்களின் நாடகத்தை இனம் காண்பது என்பது கடினமான விடயமாகும்.

எனவே இனிவரும் தேர்தல் காலத்திலாவது இனம் கண்டு பதிலடி கொடுக்கத் தமிழினம் தயாராகி விடும் என்பது நிறுத்திட்டமான உண்மையாகும்.

இதேவேளை தற்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த, மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன். இருந்தும் அவரை மன்னித்துத் தமிழ்த் தேசியத்திற்குப் பின்னால் பயணிக்கப் பாதை காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.


அத்துடன் இந்திய அரசாங்கத்துடனும் இலங்கை அரசாங்கத்துடனும் இணைந்து சொந்த இனத்தை அழித்த பெருமை இவரையே சாரும்.

இது இவ்வாறிருக்க விடுதலைப்புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பின் மூலம் போடப்பட்ட பிச்சைதான் தமிழ்த் தேசியம்.

எனவே அந்தக் கூட்டமைப்புடன் இணைந்து அதனைக் கட்டிக்காத்து, அதன் கொள்கைகளை வென்றெடுப்பது தங்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

இதனை மறந்து மாற்றான் இனத்துடன் ஒட்டி நிற்பவர்களுடன் உறவாடும் நீங்கள் கூட்டமைப்பைக் கட்டிக் காப்பாற்றுவீர்கள் என எவ்வாறு நம்ப முடியும்?

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை உங்கள் அரசியல் நிலைத்திருக்கும்.

தொடருங்கள் உங்கள் ஏமாற்று அரசியலை! வாழுங்கள் வசந்தமாளிகையில்!! 06 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten