தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 oktober 2011

ஐரோப்பிய நாடாளுமன்றில் திரையிடப்படவுள்ள சனல் 4 காணொளி : சீற்றத்தில் சிறீலங்கா

[ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 03:18.41 AM GMT ]
சனல் 4 காணொளி ஐரோப்பிய நாடாளுமன்றில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி குறித்த காணொளி காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மூன்று சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினால் சனல் 4 காணொளி காட்சிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த காணொளி காட்சிப்படுத்தப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் நெருக்கடிகளுக்கான அமைப்பு ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
சனல் 4 காட்சியை ஐரோப்பிய நாடாளுமன்றில் ஒளிபரப்புச் செய்வதற்காக புலி ஆதரவாளர்கள் மூன்று மில்லியன் யூரோக்களை, திரையிடும் தரப்பினருக்கு வழங்கியுள்ளனர்.
காணொளி காட்சிபடுத்தப்பட்டதன் பின்னர் சனல் 4  ஊடகவியலாளர் கெல்லம் மெக்லர், கிறீன் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றில் புலிகளுக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படமொன்று முதல் தடவையாக திரையிடப்படுகின்றது என திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான காணொளிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten