யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் அராஜகம் தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ்.செயலக அதிகாரியை அதட்டினார் யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் நீல் தலுவத்த. கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதால் யாழ். செயலக அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது
இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்.குடாநாட்டின் சிவில் பாதுகாப்பு தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கிறீஸ் மனிதன் பின்னணியில் பொலிஸார் செயற்படுவதாகவும் பொலிஸாரின் தாக்குதல்களினால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் மிகவும் துணிச்சலாக சொன்ன யாழ்.செயலக அதிகாரியை கடிந்து கொண்டு பொலிஸாரைப் பற்றி கதைப்பதற்கு உமக்கு என்ன உரிமையிருகிறது என அதட்டியுள்ளார்.
இந்த யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தலுவத்தையின் கடும் தொனியிலான கருத்திற்காக தான் மன்னிப்பு கேட்பதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.
இருந்தும் யாழ்.செயலக அதிகாரிகள் தாங்கள் கருத்து தெரிவிப்பதற்கு உரிமை இல்லையா? எமது மக்களின் பிரச்சனைகளில் எங்களுக்கும் அக்கறை இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என வாதிட்டார்.
எல்லாவற்றையும் செவிமடுத்த யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் நீல் தலுவத்த தனது கருத்திற்காக மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தார் பின்னர் சபை அமைதியானது. |
Geen opmerkingen:
Een reactie posten