தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 oktober 2011

பரசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

சுவிஸ்சில் இருந்து போராட்டத்தை பற்றி பேசுவது நியாயம்தான் போங்க!! கூட்டமைப்பை அன்று புலிகளும் ஏற்றனர்,இன்று உண்மையான தமிழரும்(ஓடாத)ஓரளவு அங்கீகரித்துள்ளனர்.பெசிப்பிரயோசனமில்லை என்றுதான் ஆயுதம் வந்தது.புலம்பெயர் தமிழர் பும்மியத்தில் அதுவும் முடிந்து ஆப்பிழுத்த குரங்கின் கதையை போனது.தலைமை போட்டியால் தமிழனின் போராட்ட்டம் தோற்றது.நாடு கிடைக்காமலே பதவிக்கு போட்ட்டியிட்டு மக்களும் அனாதையாக்கப்பட்டனர்.எனினும் வெளிநாட்டில் பிச்சைக்கு வந்தவர் கள்ளவேலைகள் செய்துவந்த காசில் அரசை அமைத்துவிட்டனர்.பாவப்பணம் தாய்நாட்டுத் தமிழரை காக்குமா?தெய்வமே தூங்கிவிட்டது,அநியாயங்களுக்கு தலைமைதாங்கும் அமெரிக்கா போன்றவை காத்தாலும் அதுவும் அநியாயத்தின் கூட்டே!


எந்தக் கோரிக்கையுடன் அமெரிக்கா செல்கின்றது? மகிற்த அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆடு - புலி ஆட்டம் நடாத்தி வருகின்றது
இலங்கைத் தீவில் யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டரை வருடங்கள் பூர்த்தியாகின்றது. ஆனாலும், மனிதப் பேரவலங்களை எதிர்கொண்ட தமிழர்களுக்கான நீதி கண்களுக்குப் புலப்படுவது போல் தெரியவில்லை.

சிறிலங்கா அரசு மீதான மேற்குலகின் போர்க் குற்றச்hட்டுக்களும் சர்வதேச தளங்களில் கருக் கொள்வதும், கலைந்து போவதுமாகவே உள்ளது. இலங்கைத் தீவில் பேசாப் பொருளாகிவிட்ட தமிழீழம் குறித்துப் புலம்பெயர் தமிழர்கள் போர்க் குரல் எழுப்பினாலும், உலக நாடுகளின் பிராந்திய நலன்களினுள் அவை கரைந்தே போய்விடுகின்றன. இருந்தபோதும், புலம்பெயர் தமிழர்கள் மேற்குலகின் அரசியல், பொருளாதார நலன்களுக்கும் அப்பாற் சென்று, அந்த நாடுகளின் நீதிமன்றங்களின் கதவைத் தட்டத் தொடங்கியுள்ளார்கள்.

அமெரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரையான பல நாடுகளில் சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது படைத் தளபதி, பரிவாரங்களுக்கும் எதிராகத் தாக்கல் செய்யும் வழக்குகள் பெருகி வருகின்றன. யுத்தத்தின் இறுதி நாட்களில் அங்கிருந்து வெளியேறிய பலரும் இந்த வழக்குகளின் சாட்சியளாகத் தம்மை இணைத்துவருகின்றார்கள். இலங்கையை மையப்படுத்தி சீனாவும், மேற்குலகும் நடாத்திவரும் சதுரங்க ஆட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கான நீதி அடிபட்டுப் போகாமல் பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பும் புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது.

அவலங்களைத் தமிழீழ மக்களும், அதன் துயரங்களைப் புலம்பெயர் தமிழர்களும் பகிர்ந்து கொள்ள, மகிற்த அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆடு - புலி ஆட்டம் நடாத்தி வருகின்றது. சிங்கள ஆட்சியாளாகளுடன் பேசி எதுவுமே ஆகப்போவதில்லை என்று தெரிந்துமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிங்கத்தின் வாயில் தலையை வைத்து வித்தை காண்பிக்கின்றது. தமிழ் மக்களுக்கு என்ன கொடுக்கப் போகின்றேன் என்று மகிந்தவும் சொல்லவில்லை, தமிழ் மக்களுக்காக என்ன கேட்கிறேன் என்று சம்பந்தரும் சொல்லவில்லை. ஆனாலும், யுத்தம் நிறைவடைந்த மூன்றாவது அவல வருடத்திலும் முடிவடையாதவகையிலான போச்சுவார்த்தையுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தைத் தொலைத்து வருகின்றது.

தமிழீழ மக்களுக்கு என்ன தேவை என்று கேட்காத பவ்வியத்துடன் டெல்லிக்குக் காவடி எடுத்த சம்பந்தர், தற்போது அமெரிக்கா பக்கம் சுக்கானைத் திருப்பியுள்ளார். இத்தனையாண்டு காலப் போராட்டத்தின் பின்னரும், இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களது உயிர்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஈழத் தமிழர்களது இறைமையை முன்வைத்து ஒரு தீர்வுப் பொதியினை வரைவதற்கு முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவரை சென்று எதைச் சாதிக்கப் போகின்றது? என்பது புரியாமலேயே உள்ளது.

சுவிசிலிருந்து கதிரவன்
eutamil.com
25 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten