அரச ஊழியர்களுக்கு ஆப்பு வைத்தார் இமெல்டா மேடம்.
04 October, 2011
யாழ்.மாவட்டத்தில் வறுமை நிலையிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடுகள் தேவையாக உள்ளது. இந்த நிலையில் அவர்களை விடுத்து நிரந்தர வருமானம் பெறும் அரச உத்தியோகத்தர்களுக்கு எந்தத் திட்டத்தின் மூலமும் வீடுகள் வழங்க வேண்டாம் எனவும் அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அதனை உடனடியாக நிறுத்தவும். இவ்வாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளாராம்.
யாழ்.மாவட்டத்தின் வீடமைப்புத் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபை, இந்தியன் வீடமைப்பு திட்டப் பொறியியலாளர்கள், வீடமைப்பு பணிகளை மேற் கொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டமை வருமாறு:
யாழ்.மாவட்டத்தில் கடந்த வருட கணக்கெடுப்பின் பிரகாரம் 60 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளது. தற்போது உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதால் இன்னும் வீட்டுத் தேவை அதிகமாகியுள்ளது. இருப்பினும் இதுவரையில் 27 ஆயிரம் பேருக்கே வீடுகள் கட்டிக் கொடுப்பது தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது. எஞ்சிய வறிய மக்களுக்கும் வீடமைப்புத் திட்டம் வழங்கப்பட வேண்டியுள்ளது.சகல கிராம சேவகர்களும், பிரதேச செயலர்களும் இது தொடர்பில் உரிய அக்கறையுடன் செயற்பட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அரச அதிகாரிகளுக்கு எந்தவொரு வீட்டுத் திட்டமும் வழங்கப்படக்கூடாது. அவ்வாறு வழங்கப்பட்டால் அதை உடனடியாக நிறுத்த வேண்டும். எனவும் மேடம் கூறியுள்ளார்.
ஆனால் இவர் மட்டும் அரசாங்கம் கொடுத்த வீட்டில் சொகுசாக வாழலாம். மற்ற அரசாங்க உத்தியோகத்தர்கள் எப்படியும் வாழலாம் என்று நினைக்கிறார்.
Geen opmerkingen:
Een reactie posten