தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 oktober 2011

நாம் எதிர்பார்த்து வந்த அனைத்து விடயங்களும் அமெரிக்காவில் கலந்துரையாடப்பட்டன என்ற திருப்தியோடு கனடா வந்துள்ளோம் - மாவை சேனாதிராஜா

 (படங்கள் இணைப்பு)
நாம் எதிர்பார்த்து வந்த அனைத்து விடயங்களும் அமெரிக்காவில் கலந்துரையாடப்பட்டன என்ற திருப்தியோடு கனடா வந்துள்ளோம் கனடா ரொரென்ரோ விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு

நாங்கள் இலங்கையை விட்டு அமெரிக்காவை நோக்கி பயணமாகியபோது எதிர்பார்த்து வந்த அனைத்து விடயங்களும் மிகவும் திருப்தியான முறையில் கலந்துரையாடப்பட்டன. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அங்கு பல மட்டங்களில் நடத்திய பேச்சுவார்த்தைகள் எமக்கு பூரண திருப்தியைத் தந்துள்ளன. அந்த திருப்தியுடனே நாம் கனடா வந்துள்ளோம். இங்கும் கனடிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சின் கொள்கையாக்கல் அதிகாரிகள் ஆகியோரோடு எதிர் வரும் திங்கட் கிழமை ஒட்டாவா மாநகரில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.

ஆத்துடன் கனடாவில் இயங்கிவரும் தமிழ்த்தேசியகூட்டமைப்பின் கிளை முக்கியஸ்த்தர்களோடு கலந்துரையாடல்களை நடத்தி எமது அமைப்பின் எதிர்காலத்திட்டங்கள் பற்றி ஆராயவுள்ளோம்”

இவ்வாறு நேற்று சனிக்கிழமை இரவு கனடாவின் ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராஜா கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

அவருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தனும் வந்திருந்தார். இந்த இருவரோடும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு எம். ஏ. சுமந்திரன் மேற்படி இருவர் வந்த விமானத்தில் பிரயாணம் செய்யாதபடியால் அவரது கனடிய வருகை சற்று தாமதமாகியது. சுமார் மூன்று நாட்கள் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தினரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் ஏனைய சில கலந்துரையாடல்களில் பங்கெடுத்திருந்தாலும் திருவாளர்கள் இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா ஆகியோர் விமான நிலையத்தில் தங்களை வரவேற்க வந்தவர்களிடம் மிகவும் உற்சாகமாக உரையாடினர். குனடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கிளையின் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் விமான நிலைய வரவேற்புப் பகுதியில் கூடிநின்றனர்.

தொடர்ந்து உரையாடிய திரு மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில் “ எமது அமெரிக்க விஜயத்தை உலகெங்கிலும் உள்ள நமது தமிழ் பேசும் உறவுகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கையில் நாம் அந்த விஜயத்தின் முதலாம் கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்த பின்னர் கனடா வந்துள்ளோம். எமது குழுவிற்கும் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எமது திருப்திக்கு ஏற்ற வகையில் இடம்பெற்றன. முக்கியமாக நமது மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக நமது குரலை தொடர்ச்சியாக நாம் உரத்து ஒலிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான கவனத்தை உலகிற்கு கேட்கும் வண்ணம் மிகுந்த வலுச்சேர்த்து பேச வேண்டும். அதில் எவ்விதமான தளர்ச்சியையும் தமிழர் தலைமை காட்டக் கூடாது போன்ற கருத்துக்கள் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளினால் எம்மோடு பகிர்ந்து கொள்ளப்பட்டன. எனவே எமது அமெரிக்க விஜயம் எமக்கு நல்ல பலனைத் தரும் என்றே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

கனடாவில் எதிர்வரும் திங்கட் கிழமை காலை தொடக்கம் ஒட்டாவாவின் வெளிவிவகார அமைச்சு அதிகாரிளோடு நாம் நடத்தவுள்ள பேச்சுக்களின் போதும் எமது மக்களின் அடிப்படை உரிமைகள் அவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்களில் எமது கருத்துக்கள் முன்வைக்கப்படும்.அத்துடன் எமது மக்களின் அபிலாசைகள் தொடர்பான விடயங்களை கனடிய அரசிடம் நாம் எடுத்துரைப்போம்” என்று திரு மாவை சேனாதிராஜா கூறினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலய கருத்தரங்கு மண்டபத்தில் திருவாளர்கள் இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும்.

ஆதனைத் தொடர்ந்து இரவு ஸ்காபுறோ பீற்றர் அன் |போல் விழா மண்டபத்தில் இராப்போசன விருந்து மற்றும் கலந்துரையாடல் ஆகியன இடம்பெறவுள்ளன.

நன்றி Tamilwin.com
30 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten