தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 oktober 2011

முற்பகல் செய்யின்....

கொலன்னாவவில் துப்பாக்கிச் சண்டை � சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் உள்ளிட்ட மூவர் பலி(video)

எங்களுடைய அரசாங்கம், நாங்கள் நினைத்ததைச் செய்வோம் முல்லேரியா சம்பவம் - நேரடி ரிப்போர்ட் 

கொலன்னாவை இம்புட்டான வீதி சிறிமாவோ பண்டாரநாயக்க வாசிகசாலைக்கு முன்பாக இன்று சனிக்கிழமை பிற்பகல் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 15 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவரின்; நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

படுகாயமடைந்தவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிக்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்று சற்றுநேரத்தின் பின்னர் அவ்விடத்துக்கு நாம் விரைந்தபோது…

கொட்டிகாவத்தை � முல்லேரியாவ பிரதேச சபைக்கான வாக்களிப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இன்று மாலை 3.40 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நிலையத்துக்கு முன்பாக இருதரப்பினரும் நேருக்குநேர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் எமக்குத் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் அங்கொடை மொரகஸ் சந்தியில் பொலிஸாரின் வாகனத்துடன் அரசியல் பிரமுகர் ஒருவரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. அவ்விடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினர். இளைஞர்கள் சிலர் அங்கிருந்த பொலிஸாரைத் தாக்குவதற்கு முயற்சித்தவேளை பொலிஸார் பின்வாங்கினர்.

செய்தி சேகரிப்பதற்காக அவ்விடத்திலிருந்த ஊடகவியலாளர்களை நோக்கி வந்த சிலர் “எங்களுடைய அரசாங்கம், நாங்கள் நினைத்ததைச் செய்வோம். யார் எங்களைப் படம் எடுக்கச் சொன்னது” எனக் கேட்டுக்கொண்டே ஊடகவியலாளர்களைத் தாக்குவதற்கு முயற்சித்தனர்.

எமது வாகனத்துக்கு அருகில் செல்வதற்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை.

ஏனைய ஊடகவியலாளர்கள் வருகைதந்திருந்த வாகனத்தில் அங்கொடை பகுதியூடாக பயணித்தபோது அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் வீடும், அலுவலகமும் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.

உடனடியாக அவ்விடத்துக்கு வந்த அதிரடிப்படையினர் பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அவ்வழியாகச் செல்ல முடியாததால் நாம் வேறு வழியாக வந்தோம். அப்பகுதியெங்கும் பதற்றமாகக் காணப்படுவதுடன் மீண்டும் கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டப்படுத்தும் வகையில் முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் உட்பட விசேட இராணுவ படைப்பிரிவினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
08 Oct 2011

கொலன்னாவவில் துப்பாக்கிச் சண்டை � சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் உள்ளிட்ட மூவர் பலி (வீடியோ இணைப்பு)


சிறிலங்காவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இடையில் கொலன்னாவில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில், சிறிலங்கா அதிபரின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர உள்ளிட்ட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 10இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லேரியா ஹிம்புட்டான பிரதேசத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க பொதுநூலகத்துக்கு முன்பாக- வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கு அருகிலே இன்று 3.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலின் போதே, பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திரவும் அவரது இரு மெய்க்காவலர்களும் உயிரிழந்தனர்.

தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன், ஆபத்தான நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் மக்சி புரொக்டர் தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவின் ஆதரவாளர்களின் துப்பாக்கிச் சூட்டிலேயே சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர கொல்லப்பட்டுள்ளார்.

இவரது ஆதரவாளர் ஒருவர் நேற்றிரவு கொலன்னாவ பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதன் விளைவாகவே இன்றைய மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து கொலன்னாவ பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் அங்காங்கே சிறுசிறு மோதல்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா காவல்துறை வாகனம் ஒன்று அப்பகுதியில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினரும் தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பகுதிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, முல்லேரியா பகுதியில் ஊரடங்குச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நாளை காலை 6 மணிவரை ஊரடங்குசட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் சிறிலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, அங்கொட வெல்லம்பிட்டிய பகுதியிலும் இன்று மாலை இரு குழுக்களுக்கு இடையில் பாரிய மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலின் போது ஆளும்கட்சியின் செயலகம் இயங்கிய வீடு ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 08 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten