(வீடியோ இணைப்பு)
களனி தர்மலோக பாடசாலைக்கு இன்று விஜயம் செய்த பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா பாடசாலைக்கு வெளியில் வைத்து பெற்றோர் ஒருவரை கடுமையாக ஏசியதுடன் கன்னத்திலும் அறைந்துள்ளார்.
களனிப் பிரதேசத்தில் சண்டியனும் நானே, அரசியல்வாதியும் நானே இங்கே எவருக்கும் விளையாட்டு போட முடியாது என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பாடசாலை அபிவிருத்தி தொடர்பான நலன்புரி லொத்தர் சீட்டிலுப்பில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் ஊடகங்களில் குரல் கொடுத்த நபர் ஒருவரே இவ்வாறு அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளவராவார்.
அமைச்சர் மேர்வின் சில்வா குறித்த நபரை மிகவும் திட்டித் தீர்க்கும் காட்சிகளும் கன்னத்தில் அறைகின்ற காட்சியும் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
குறித்த பாடசாலையில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தப்பட்டு லொத்தர் டிக்கற் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பணம் கொடுக்காத மாணவர்கள் தண்டிக்கப்படுவதாகவும் அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்ட நபர் தெரிவித்தார்.
தர்மலோக பாடசாலைக்கு நீச்சல் தடாகம் ஒன்று அவசியம் எனவும் இங்குள்ள மாணவர்கள் எல்லாம் தனது பிள்ளைளைப் போன்றவர்கள் எனவும் பாடசலையின் அபிவிருத்திக்கு பெற்றோர்கள் உதவி செய்யவேண்டும் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா அங்கு கருத்து தெரிவித்துள்ளார்.
04 Oct 2011

Geen opmerkingen:
Een reactie posten