தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 oktober 2011

நெதர்லாந்தில் செயற்பட்டு வரும் புலி ஆதரவு அமைப்புக்கள் குறித்து விசாரணை

[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 02:32.24 AM GMT ]

நெதர்லாந்தில் செயற்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாதத்தில் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிப்படுகிறது.
நெதர்லாந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஐந்து பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
புலி ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புலிகள் போர் ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten