தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 31 oktober 2011

கரேபிய தீவுகளின் பத்திரிகை மகிந்தரைக் கேலிச்சித்திரம் வரைந்துள்ளது !

கரேபிய தீவுகளில் இருந்து வெளியாகும் கரேபியன் ரைம்ஸ் என்னும் பத்திரிகை மகிந்தரைக் கேலிச் சித்திரமாக வரைந்து வெளியிட்டுள்ளது. இது ஒன்றும் அர்த்தமற்ற கேலிச்சித்திரம் அல்ல. இதனை கூர்ந்து கவனித்தால் அங்கே கிழட்டுச் சிங்கம் ஒன்றும் மற்றும் கொடூரமான சிங்கம் ஒன்றும் இருப்பதை நீங்கள் காணலாம். கொடுமையான சிங்கம் வாயில் இருந்து ரத்தம் கசிவதும் அங்கே தத்துரூபமாக வரையப்பட்டுள்ளது. அது இனப் படுகொலையையும் மக்கள் ரத்தத்தையும் காட்டும் வகையில் அமைந்துள்ளது. கிழட்டுச் சிங்கத்தின் தலையில் பிரித்தானிய ராணிக்குரிய முடியும் அணியப்பட்டுள்ளது.

பிரித்தானிய இராணியின் இராசதானிச் சின்னங்களில் சிங்கமும் ஒன்றாகும். ஆனால் அது கிழட்டுச் சிங்கமாகத் தற்போது காணப்படுவதும். பிரித்தானிய தலைமையேற்று நடத்தும் காமன்வெலத் நாடுகளின் கூட்டத்தொடரில் அது இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிப்பதும் இக் கேலிச் சித்திரத்தில் தத்துரூபமாக வரையப்பட்டுள்ளது.

 

Geen opmerkingen:

Een reactie posten