[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 12:09.26 PM GMT ]
வன்னி யுத்தத்தால் பார்வையற்றவர்கள் மாத்திரமன்றி கைகால்களை இழந்து அங்கவீனமானவர்களும் பெருமளவில் உள்ளார்கள். ‘யுத்தத்தில் ஒருவரும் இறக்கவில்லை, ஒரு பாதிப்பும் இல்லை’ என கூறும் இன்றைய அரசும் அது சார்ந்தவர்களும் இவர்களை பதிவு செய்து உதவி செய்வதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தமிழர் தரப்புகளும் இவ் இழப்புக்களின் எண்ணிக்கையை ஆவணப்படுத்தவில்லை. இவற்றையெல்லாம் ஆண்டவன் கணக்கெடுக்கின்றான் என்று சொல்லி எம்மையும், சமூகத்தையும் ஏமாற்றி பேச்சு மூச்சின்றி இருக்கின்றோம் என யாழ்;ப்பாணத்தில் நடந்த வெள்ளைப்பிரம்பு தின வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண லயன்ஸ் கழகத்தினரும், யாழ்ப்பாண விழிப்புலனற்றோர் சங்கத்தினரும் இணைந்து நடத்திய வெள்ளைப்பிரம்பு தினவிழா யாழ் விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் எஸ். மகேந்திரன் அவர்கள் தலைமையில் சுண்டுகுளி மகளிர் கல்லூரியில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றது.
இதில் விழிப்புலனற்றோர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி மாணவிகளும், பொதுமக்கள் சிலரும் கலந்து கொண்டனர். இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ் லயன்ஸ் கழகத்தின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் உரையாற்றும் போது பின்வரும் விடயங்களை முன்வைத்தார்.
1931 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரினோய் மாவட்டத்தில் உள்ள பியோரியா எனும் இடத்தில் வெள்ளைப்பிரம்பு என்பது பார்வையற்றவர்களின் ஒரு அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டது.
இதனை ஜ.நா அமைப்பும், ஜ.நா உறுப்பு நாடுகளும் அங்கீகரித்துள்ளன. வெள்ளைப்பிரம்பினை காணும் பொதுமக்கள் அவர்கள் பார்வையற்றோர் எனக் கருதி சகல விதத்திலும் உதவி புரியவேண்டும் என்பதே இதன் தார்ப்பரியமாகும். வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவத்தையும், அதன் அர்த்தத்தையும் பார்வையற்றவர்களைவிட பொதுமக்களே அதிகம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.
பொதுமக்கள், விழிப்புலனற்றோருக்கு வழங்க வேண்டிய உரிமைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
01. வெள்ளைப்பிரம்புடன் வருபவரைக் கண்டால் ஒதுங்கி அவருக்கு வழிவிட வேண்டும்.
02. வீதியை அவர் கடக்கும் போது வாகனசாரதி வாகனத்தை நிறுத்துவதோடு பாதசாரிகள் அவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
03. பார்வையற்றவர்கள் எந்த பொது வாகனத்தையும் வீதியில் எந்த இடத்தில் மறித்து இறங்கவோ, ஏறிச் செல்லவோ முடியும்.
04. வெள்ளைப்பிரம்போடு வருபவர் ஒருவர் விபத்து ஒன்றை எதிர்கொள்வார் ஆயின் அதனை ஏற்படுத்தியவருக்கு பாரதூரமான தண்டனை உண்டு.
05. வெள்ளைப்பிரம்பினை பார்வையற்றோர் மாத்திரமன்றி பார்வைக் குறைபாடு உடையவர்களும் பயன்படுத்தலாம்.
மேற்படி விடயங்களை சகல பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளுதல் சமூக நேசிப்புள்ள அனைவரதும் கடமையாகும்.
பேராசிரியர் இரா.சிவசந்திரன் மேலும் கூறுகையில் யாழ்ப்பாணத்தில் விழிப்புலனற்றோர் சங்கங்கள்; இரண்டு; சிறப்பாக செயற்பட்டு வருகின்றன. இதில் 1976ஆம் ஆண்டில் திரு.விஜயராஜசிங்கம், திரு.தர்மராசா, திரு.சிவகுமார் ஆகியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட யாழ்.விழிப்புலனற்றோர் சங்கமே முதலில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
பின்னர் திரு.ரவீந்திரன் அவர்களால் சுன்னாகத்தில் ‘வாழ்வகம்’ எனும் நிறுவனம் விடுதி வசதியுடன் கூடியதாக அமைக்கப்பட்டது. இதில் முக்கியமாக கல்வி கற்கும் மாணவர்களே அங்கத்தவர்களாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள்.
இவ் இரு சங்கங்களும் வன்னி யுத்தத்தின் பின்னர் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. முக்கியமாக வன்னி யுத்தத்தால் பார்வையிழந்த பலர் இவர்களுடன் இணைந்து வருகின்றார்கள். இவர்களை போஷிக்கக்கூடிய நிதி வசதிகள் போதாது உள்ளது. புலம்பெயர் வாழ் தமிழர்கள் இவ்வாறான சங்கங்களிற்கு நிதி வழங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
வன்னி யுத்தத்தால் பார்வையற்றவர்கள் மாத்திரமன்றி கைகால்களை இழந்து அங்கவீனமானவர்களும் பெருமளவில் உள்ளார்கள். ‘யுத்தத்தில் ஒருவரும் இறக்கவில்லை, ஒரு பாதிப்பும் இல்லை’ என கூறும் இன்றைய அரசும் அது சார்ந்தவர்களும் இவர்களை பதிவு செய்து உதவி செய்வதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தமிழர் தரப்புகளும் இவ் இழப்புக்களின் எண்ணிக்கையை ஆவணப்படுத்தவில்லை. இவற்றையெல்லாம் ஆண்டவன் கணக்கெடுக்கின்றான் என்று சொல்லி எம்மையும், சமூகத்தையும் ஏமாற்றி பேச்சு மூச்சின்றி இருக்கின்றோம். இங்கு ஆவணப்படுத்தும் முயற்சி சிக்கலைத் தரும் ஆகையால் புலம்பெயர் தமிழர்களே இதில் அக்கறை செலுத்துதல் வேண்டும்.
உறுப்புகள் பாதிக்கப்பட்ட இவ்வாறானவர்களை நாம் விழிப்புலனற்றோர் என்றோ, வலுவிழந்தவர் என்றோ எதிர்மறையாகக் கூறாது மாற்று வலு உள்ளோர் அல்லது மாற்றுத் திறனாளிகள் என்று சாதகமான நிலையைச் சுட்டி அழைப்பதே பொருத்தமானதாகும்.
உதாரணமாக விழிப்புலனற்றோரிடம் அதிக திறமைகள் இருக்கின்றன. பலர் பார்வையற்றவர்களாக இருந்தும் பல சாதனைகளை புரிந்துள்ளனர். வரலாற்றில் ஹோமர், ஹெலன்ஹெல்லர் போன்றவர்கள் இதற்கு சிறந்த உதாரண புருஷர்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.
எனவே நாம் முக்கியமாக புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் இவ்வகையானோர் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றார்கள், என்னென்ன தொழிற்துறைகளைச் செய்கின்றார்கள், அரசு எவ்வகையில் இவர்களைப் பராமரிக்கின்றது என்பதை தெரிந்து, அதற்கேற்றதான மேம்பாடுகளை இங்குள்ள மாற்று திறனாளிகள் பெறுவதற்கு உதவவேண்டும்.
விழிப்புலனற்ற திறனாளிகள் கணனி அறிவைப் பெறுவதும், தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக உலக அறிவை பெறுவதும் இன்று சாத்தியமாகியுள்ளது. உலகம் இன்று அறிவுலகமாக மாறிவரும் சூழலில் இத் திறனாளிகளை அறிவுடையவர்களாக்கி அவர்கள் பொருளாதாரத்தை வளம்படுத்தி சமூகத்திற்கு அவர்கள் பயன்பாடுகளைப் பெற்று சமூகத்திற்கு தேவையான மனிதர்களாக அவர்களை மாற்றுதல் வேண்டும்.
பேராசிரியர்; மேலும் கூறுகையில் அரசியலில் மாற்றுத் திறனாளிகளும் பங்கு பற்றினால் தான் அவர்கள் தமது தீர்மானம் எடுக்கும் இடங்களில் தமது குரலை ஒலிக்க முடியும். இலங்கை அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் ஒரு சிறிய வீதத்தையாவது இவர்களுக்கு வழங்குதல் வேண்டும். வடகிழக்கு உள்ளுராட்சி அமைப்புகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெருமளவு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
எனவே இக்கட்சி உள்ளுராட்சி அமைப்புக்களில் இவர்களது பங்கை வழங்கி ஏனைய கட்சிகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். முக்கியமாக இச் சங்கங்கள் தமக்கென இணையத் தளங்களை உருவாக்கி கொள்ளுதல் இன்றியமையாததாகும். இவ்வாறான சங்கங்கள் இணைய தளங்கள் ஊடாக சர்வதேசத்துடன் குறிப்பாக புலம்பெயர் தமிழருடன் தொடர்புகளை பேணலாம்.
இவ் இணையத்தளம் முக்கியமாக ‘குரல் ஊடான’ பதிவுகளிற்கு முக்கியத்துவம் அளிக்கலாம். இவர்கள் தமது செயற்திட்டங்களை முன்வைத்து நிதியுதவி சார்பான வேண்டுகோள்களை இவ் இணையத்தளத்தின் ஊடாக சர்வதேசத்திடம் கோரலாம் என தனது பிரதம விருந்தினர் உரையில் பேராசிரியர் குறிப்பிட்டார்.
யாழ் விழிப்புலனற்றோர் சங்க தலைவர்; திரு மகேந்திரன் அவர்கள் யாழ்ப்பாண சூழ்நிலையில் தாம் படும் சிரமங்களை எடுத்துக் கூறினார். வெள்ளைப்பிரம்பு பற்றி அறியாத யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்பு படையினர் ‘கையில் என்ன பெரிய புல்லாங்குழலா வைத்திருக்கின்றீர்’ என கேட்பது எமக்கு பெரும் கவலை அளிக்கின்றது.
பொதுமக்களிற்கு வெள்ளைப்பிரம்பு பற்றிய அறிவு மிகவும் குறைவாகவே உள்ளது. அது பற்றிய அறிவு இருந்தால் அந்த அடையாளத்திற்கு அவர்கள் மதிப்பளிப்பார்கள். எனவே பொதுமக்களிற்குரிய அமைப்புக்கள், கல்லூரிகள் வெள்ளைப்பிரம்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறுதல் வேண்டும்.
மேலும் எங்களைப் பார்த்து யாரும் பரிதாபப்பட வேண்டாம்;. எங்களிற்கு பார்வை மட்டுமே இல்லையே தவிர ஏனைய தகுதிகளும், ஆற்றல்களும் உண்டு. ஒவ்வொரு நபர்களும் ஏதோ ஒரு சுய தொழிலை செய்வதற்கு நீங்கள் உதவினால் போதும். இதன் மூலம் எமது ஆளுமையை, திறமையை மேம்படுத்துவதற்கு உதவ முடியும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.
இக் கூட்டத்தின் இறுதியில் யாழ் லயன்ஸ் கழகத்தின் சார்பாக லயன் திரு ஸ்ரீபன் அவர்கள் பங்குபற்றியோருக்கு பரிசுப்பொருட்களை வழங்கினார். செயலாளர் திரு ரி.அன்பானந்தனின் நன்றியுரையுடன் எல்லோருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்ட பின் நிகழ்வுகள்; நிறைவு பெற்றன.

Geen opmerkingen:
Een reactie posten