தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 oktober 2011

பெற்றோர் ஒன்றும் மூடர் அல்ல!புலி வாலே பொத்திக்கொண்டிரு!!

 மூடத்தனமான சிந்தனைகளாலும் பதவி வெறியினாலும் சிறந்த போராளிகளை அழித்தும் துரோகிகலாக்கியும் மகிழ்ந்த தலைமையால் தமிழ் ஈழம் மட்டுமல்லாது தமிழர் சுதந்திரவாழ்வும் முற்றாக பறிபோனதை அறியாத பக்கசார்பு விசுவாசிகளால் எழுதப்படும் கருத்துக்க்களை பாருங்கள் மக்களே!!இல் கட்டுப்பாட்டுக்குள் தமிழ் ஈழம் வந்தது,இயக்கங்கள் அழிவு காரணமாக ராணுவம் பலமாக,இந்திய போரால் நாம் மிகவும் நலிந்துபோக உண்மை உணரா மூடராய் புலம்பெயர்ந்தோர் வீரம் பேச மாவிலாறில் கைவைத்த புலிகள் வீரம் யாருமற்ற அனாதைகளாய் தமிழர் எதிரியின் பாட்டுக்கு ஆடவேண்டிய நிலையை உருவாக்கியது.பேடிகளை சயனை துறந்து வெள்ளைக்கொடி பிடித்த நம் வீரரை விட பெற்றோர் ஒன்றும் மூடர் அல்ல.உயிரை காக்க மக்களை பணயமாக்கி பெண்களின் கற்பை பலிகொடுத்த தலைமையை விட  பெற்றோர் ஒன்றும் மூடர் அல்ல!அதையே உலகில் வன்னிப்பெண்கள் எல்லாம் கற்பளிக்கப்படவர் என்று அனுதாபந்தேடிய தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை விட(அப்படியானால் எப்படி கற்பு பற்றி நீங்கள் பேசலாம்,மீண்டும் கற்பு எப்படி?)பெற்றோர் ஒன்றும் சுயனலவாதிகளல்லவே?நிலைமையை உணர்ந்து செயற்படுவது ராஜதந்திரம்,புலிகள் தந்திரமல்ல ஆயுதத்தை அனைவரும் செத்துக்கொண்டிருக்கையில் மௌனிக்க!!புலி வாலே பொத்திக்கொண்டிரு!!
யாழ்ப்பாண இளம் குமரிகளின் இராணுவக் குத்தாட்டம்! (வீடியோ இணைப்பு) 

இறுதி யுத்தம் என்ற பெயரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் எம்மினப் பெண்கள் பாலியல் வக்கிரம் கொண்ட சிங்கள இராணுவக் காடையர்களால் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டது நீங்கள் அறிந்த ஒன்று.

இவ்வாறான இராணுவக் காடேறிகள் முன்னிலையில் குத்தாட்டம் போடுகின்றனர் யாழ்ப்பாண இளம் குமரிகள்.

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மகிழ்வரங்கு ஒன்று நடைபெற்றது.

முழுக்க முழுக்க இராணுவ மயமாக்கப்பட்ட இம் மகிழ்வரங்கில் தமது பாடல்களுக்கு தமிழ் இளம் குமரிகளை ஆடவிட்டு அழகு பார்த்தது சிங்களம்.

இவ்வாறு ஆடும் தமிழ்ப் பெண்களை இரகசியமான முறையில் தமது வீடியோக் கமராவினால் வித்தியாசமான பதிவுகளைச் செய்தமையையும் காணக் கூடியதாக இருந்தது.

இதேவளை தமது இளம் பெண் பிள்ளைகளை இராணுவக் களியாட்டத்தில் கலந்து கொள்ள விட்டுவிட்டு அருகில் நின்று கைதட்டி உற்சாகப்படுத்தும் பெற்றோர்களை நினைக்கும் போது நெஞ்சு வெடிக்கின்றது.

காலப் போக்கில் கைதட்டிய இரு கைகளாலும் தமது கண்ணீரைத் துடைக்கும் காலம் வெகுவிரைவில் வரும் என்பதை அறியாதிருக்கும் பெற்றோர்களே யாழ்ப்பாணத்தில் அரங்கேறும் அனைத்து கலாசாரச் சீரழிவுகளுக்கும் காரணமானவர்கள் ஆவர்.

இவ்வாறு களியாட்டத்தில் கலந்து கொள்ள விட்டு விட்டு, பின்னர் எனது பிள்ளையை ஏமாற்றி விட்டு கருவையும் சுமக்க விட்டுவிட்டான் என கதறி அழுவதும் நீங்கள்தான்.

எனவே பிள்ளைகளைப் பொறுப்புடன் அவர்களின் இனத்தின், மதத்தின் கலாசாரத்திற்கேற்ப வளர்த்து ஆளாக்குவதை விடுத்து அந்நியனுடன் ஆட விட்டுக் கூத்துப் பார்க்கும் நீங்கள்தான் அவர்கள் தப்பான வழிக்குப் போவதற்குக் காரணம் ஆகின்றீர்கள்.

தமிழினத்தின் தனிநாட்டுக்காக எத்தனையோ இளம் பிள்ளைகள் தங்களின் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய இனத்தில் பிறந்தவர்களா இவர்கள் எனச் சந்தேகப்பட வைக்கின்றது.

தமிழ்த் தேசியத்தின் உணர்வலைகளை அறுக்கும் ஒரு கபட நோக்கத்துடன் சிங்களம் மேற்கொள்ளும் இவ்வாறான நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் புறக்கணிப்பது காலத்தின் தேவையாகும்.

இதேவேளை புலம்பெயர் தேசத்தில் இருந்து தமிழீழம் காணத் துடித்துக் கொண்டிருக்கும் உறவுகளே! யாழ்ப்பாணத்தில் நடக்கும் குத்தாட்டங்களைப் பாருங்கள்.

அங்கிருந்து கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து பலதரப்பட்ட வட்டமேசை மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், கனவு காணும் தமிழீழத்தில் தற்போது என்ன நடக்கிறது என்பதை சற்றுத் திரும்பிப் பாருங்கள்.

தமிழிழனத்தை அழிக்க சிங்கள இராணுவம் இலகுவான வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது. அதனை தடுக்க முயற்சி செய்யுங்கள்.

அதைவிடுத்து நீங்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு பதவிக்காகவும், கௌரவத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, தமிழினத்தை அழிக்க சிங்களம் போடும் திட்டத்திற்கு நீங்கள் சல்லாரி போடுவது போன்று இருக்கின்றது.
 08 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten