தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 oktober 2011

மீளக் குடியமர்ந்தும் அடிப்படை வசதிகளிற்காக ஏங்கித் தவிக்கும் வலிவடக்கு மக்கள்!


(படங்கள் இணைப்பு)
மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட இடங்களில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அரசாங்கத்திடமும், அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் மீளக்குடியமர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் வலி வடக்கு பிரதேசத்தில் 22 வருடங்களுக்குப் பிறகு மீளக் குடியமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பற்றைக் காடுகளும், வெடிக்காத குண்டுகளும் மற்றும் வெடி பொருட்களுமே காணப்படுகின்றது. இங்கு மீளக் குடியமர்வதற்கு எதுவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

இங்கு மீளக் குடியமர்ந்த மக்களிற்கு தற்காலிக கொட்டகைகள் அமைப்பதற்கோ, மலசல கூடங்கள் அமைப்பதற்கோ, குடிநீர் வசதிகள் வழங்குவதற்கோ அரசாங்கமோ,அரச சார்பற்ற நிறுவனங்களோ இதுவரை முன்வரவில்லை என அப்பகுதியில் மீளக் குடியமர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
12 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten