தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 oktober 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறும் தமிழர் இலட்சியம் தமிழீழமா?! கிழக்கு முதலமைச்சர் கேள்வி

[ புதன்கிழமை, 12 ஒக்ரோபர் 2011, 09:07.00 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறும் தமிழர் இலட்சியம் என்பது இப்பொழுது தமிழீழ இலட்சியம் தானா? அப்படியென்றால் அன்று எடுத்த வட்டுக்கோட்டைத் தீர்மான இலட்சியப் பாதையில், ஏன் இவர்கள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்யவில்லை? என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். 
கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய பவள விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் உரைநிகழ்த்திய அவர்,
நாங்கள் ஆண்ட இனம், ஆளப் பிறந்த இனம், மீண்டும் ஆள வேண்டுமென அப்போது கூறிய அவர், எங்கள் வீட்டில் இராணுவம் குடியிருக்கின்றது, அவர்களை வெளியேற்ற வேண்டும், அதற்காக வாக்களியுங்கள் என்றும் கூறியிருந்தார்.
எமது தமிழ் மக்கள் இலட்சியத்திற்காக வாக்களிப்பவர்கள் அதுவும் எமக்குத் தெரியுமெனவும் கூறியிருந்தார்.
அந்த இலட்சியம்தான் என்னவென்பது புரியாத புதிராகவுள்ளது.
என்னைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சி வரலாற்றில் வகுத்துக் கொண்ட இலட்சியம் தான் தமிழீழ இலட்சியம்.
இந்த தமிழீழ இலட்சியத்தை வகுத்துக் கொண்ட 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் உருவாக்கப்பட்டது தான் தமிழர் விடுதலைக் கூட்டணியாகும்.
ஒரு தலைவர் கூட்டம் ஓர் இலட்சியத்தை வகுக்குகின்ற பொழுது அதாவது இலட்சியமென்பது உயிரை ஆன்மாவை, உடமைகளை, எல்லாவற்றையும் அர்ப்பணித்து ஆற்றுகின்ற ஒரு பணி என்றே வகுப்பர்.
அப்படிப் பார்த்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறும் இலட்சியம் என்பது இப்பொழுது தமிழீழ இலட்சியம் தானா?
அப்படியென்றால் அன்று எடுத்த வட்டுக்கோட்டைத் தீர்மான இலட்சியப் பாதையில், ஏன் இவர்கள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்யவில்லை?
பின்னர் போராட்டக் குழுக்களால் அமிர்தலிங்கம் ஐயாவின் உயிர் பறிக்கப்பட்டதேயொழிய, அவர்கள் வகுத்தெடுத்த எமது இளைஞர்கள் மத்தியில் திணித்த இலட்சியத்திற்காக எந்த தமிழ் அரசியல் தலைவரும் மரணிக்கவில்லை, உயிர்களைத் தியாகம் செய்யவில்லையென்ற உண்மை இருக்கின்றது.
ஆனால் இவற்றையெல்லாம் செய்து விட்டு, இவ்வளவு இழப்புக்கள், அழிவுகளுக்கும், எமது மக்களின் வாழ்க்கைத் தரம் குறைப்பிற்கும் மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கும் மிக அதிகமான விதவைகளின் உருவாக்கத்திற்கும் காரணமாகவிருந்த தமிழ்த் தலைவர்கள் என்போர் இவ்வளவு காலம் கடந்தும் அவர்கள் எதிர்பார்த்த நம்பிக்கை உடைந்த பின்னரும் வந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
மீண்டும் இலட்சியத்திற்காக வாக்களியுங்கள், ஆதரவைக் கூட்டித் தாருங்களென்றும் கேட்கின்றனர்.
இந்த நிலையில் இன்னும் எமது மக்கள் தெளிவில்லாமலிருக்கின்றனரா அல்லது நான் தெளிவில்லாமல் அரசியல் செய்கின்றேனா என எண்ணத் தோன்றுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten